உரிமை துறப்பு
இந்த உரிமை துறப்பு இந்த www.horlicks.in தளத்தை நிர்வகிக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்டுள்ளது. இந்த தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த உரிமை துறப்பில் உள்ள அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்ற நடக்க நீங்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கிறீர்கள்.
இந்த தளம் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டுமே உள்ளது மேலும் இந்த தளத்தை பார்ப்பதற்கும் இந்த தளத்திற்கு தன்னார்வத்துடன் தகவல் வழங்குவதற்காகவும்தான் உள்ளது. GSKCH இந்தியாவில் உள்ள நுகர்வோருக்கு ஊட்டச்சத்து ஆரோக்கிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப் படுத்துகிறது மேலும் நுகர்வோரின் நலனுக்காக இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
க்ளாக்ஸோஸ்மித்க்ளைன் கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் லிமிடெட் (GSKCH) அல்லது அதன் ஏஜென்ஸி எந்தவிதத்திலும் NDNC (தேசிய அளவிலான அழைத்து தொந்தரவு செய்ய வேண்டாம்) பதிவகத்தின் கட்டுப்பாட்டிற்கு பொறுப்பாக மாட்டார். பதிவு செய்துள்ள அனைத்து பயனர்களும் இதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி அவர்கள் NDNC, DND (தொந்தரவு செய்ய வேண்டாம்) ஆகியவற்றில் பதிவு செய்திருந்தாலும், இந்த போட்டியில் அவர்கள் தன்னார்வத்துடன் பங்கேற்பதன் காரணத்தால் அத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களை அழைக்க GSKCH அல்லது அதன் ஏஜென்ஸிக்கு அனைத்து உரிமையும் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
நீங்கள் வழங்கும் தகவலின் பயன்பாடு
இந்த இணையத்தில் உங்களது பெயர், முகவரி, மின்னங்சல் முகவரி, தொலைபேசி எண் போன்ற நீங்கள் வழங்கிய உங்களது தனிப்பட்ட தரவு பொருந்தாது. தயவுசெய்து தனிப்பட்ட தகவலை நாங்கள் கையாளும் முறை பற்றி தெரிந்து கொள்ள எங்களது தனியுரிமைப் பாதுகாப்பு வாக்கியத்தை வாசித்திடுங்கள்.
உங்களது கருத்துக்கள், ஆலோசனைகள், பின்னூட்டல், தரவு, கேள்விகள் போன்றவை உள்பட நீங்கள் இந்த இணையத்திற்கு சமர்ப்பிக்கும் எந்த தகவலும் இரகசியம் பாதுகாக்கப்பட வேண்டியவையாக கருதப்படாது. அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் GSKCHஇன் சொத்தாக கருதப்படும் மேலும் அத்தகைய தகவலைப் பயன்படுத்துதல் அல்லது வெளிப்படுத்துதலுக்கு GSKCH பொறுப்பாக்க மாட்டாது. அத்தகைய தகவலை இரகசியமாக காக்கும் பொறுப்பு GSKCHக்கு கிடையாது மேலும் அது இந்த தகவலை எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி மற்றவர்களுக்கு தெரிவிக்கும், பயன்படுத்தும், வெளிப்படுத்தும் மேலும் விநியோகம் செய்யும். அவ்வாறு கிடைக்கும் தகவலை, அத்தகவல்களை உள்ளடக்கிய அல்லது அத்தகவலைச் சார்ந்த பொருட்களை உருவாக்கும், உற்பத்தி செய்யும் மற்றும் சந்தைப்படுத்தும் நோக்கம் உள்பட அத்தகைய தகவலில் கிடைக்கும் யோசனைகள், கோட்பாடுகள், புரிதல் அல்லது நுட்பங்களை தனது விருப்பமான நோக்கத்திற்குப் பயன்படுத்த GSKCHக்கு முழு சுதந்திரம் உண்டு. GSKCH தனது பொருட்களை அல்லது ஏதேனும் புதிய பொருட்களை உருவாக்க, வடிவமைக்க, மறுவடிவமைப்பு செய்ய, மாற்றியமைக்க, உற்பத்தி செய்ய அல்லது சந்தைப்படுத்துவதற்காக எந்தவிதமான இரகசியமான அல்லது சொத்துரிமையுள்ள யோசனைகளையோ, ஆலோசனைகளையோ, பொருட்களையோ அல்லது மற்ற தகவலையோ கேட்காது. நீங்கள் தகவலை சமர்ப்பிப்பதன் மூலம் அத்தகைய தகவல்களை GSKCH பிரசுரிக்கலாம், தனது இயக்கங்களுக்காக பயன்படுத்தலாம் மேலும் எந்தவிதமான பொறுப்பும் இல்லாமல் GSKCH பொருட்களில் தனது கோட்பாடுகளை சேர்க்கலாம் என்று நீங்கள் உத்திரவாதம் அளிக்கிறீர்கள்.
GSKCH பொருள் குறித்த தகவல், தகவல் வழங்க வேண்டும் என்கின்றன நோக்கங்களுக்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது. GSKCH துல்லியமான தகவலை சரியான நேரத்தில் வழங்க வேண்டும் என்று முயற்சித்தாலும், தவிர்க்க முடியாத தொழில்நுட்ப அல்லது உண்மை சம்மந்தமான துல்லியமற்ற தகவல்கள் மற்றும் தட்டச்சுப் பிழைகள் அல்லது சம்மந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் மாற்றங்கள் ஆகியவை இருக்கலாம். எந்தவிதமான அறிவிப்பும் இன்றி தளத்தில் திருத்தங்கள் மற்றும் மாற்றங்களைச் செய்வதற்கு GSKCHக்கு உரிமை உள்ளது. இந்த தளத்தில் விவரிக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்து எல்லா இடத்தின் அதிகார எல்லையிலும் கிடைக்கும் என்று கோரவில்லை. என்தான் GSKCH பொருட்களையும் அதன் நிறத்தையும் முடிந்த அளவுக்கு துல்லியமாக காட்சிப்படுத்த தேவையான அனைத்து முயற்சியையம் மேற்கொண்டாலும், பொருட்களில் காட்சியளிக்கும் நிறங்கள் பயன்படுத்துபவரின் மானிட்டரின் அடிப்படையில் அமையும், மேலும் பயனரின் மானிட்டர் பொருட்களின் உண்மையான நிறத்தைக் காட்டும் என்பதற்கு GSKCH ஆல் உத்திரவாதமளிக்க முடியாது.
இந்த தளத்தின் பயனர்கள் இத்தளத்தினைப் பயன்படுத்துவது சம்மந்தமான அனைத்து பொறுப்பு மற்றும் அபாயத்தை ஏற்கின்றனர். இந்த தளத்தில் அணுகப்படும் அல்லது வெளிப்படுத்தப்படும் தகவல்களின் பொருத்தம், நம்பகத்தன்மை, கிடைக்கும் வாய்ப்பு, சரியான நேரத்தில் கிடைத்தல், முழுமை, பயனுள்ள நிலை மற்றும் துல்லியம் ஆகியவை சம்மந்தமாக GSKCH எந்த உறுதியையம் அளிக்கவில்லை. இந்த தளத்தில் வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் “அப்படியே” உங்களுக்கு வழங்கப்படுகின்றன மேலும் பொருளின் பெயர், வணிகத்தன்மை, ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வரம்பு மீறாமை மற்றும் உடலுறுதி உள்பட அனைத்து வெளிப்படையான மற்றும் உள்ளார்ந்த உத்திரவாதங்கள் உள்பட இந்த தளம் வழியாக அணுகப்படும் அனைத்து உத்திரவாதங்கள், உருவமைப்புகள் மற்றும் வலியுறுத்தல்களையும் GSKCH உரிமை மறுக்கிறது. பயனர்கள் குறிப்பிட்ட விஷயங்கள் சம்மந்தமாக குறிப்பிட்ட தொழில்முறை அலோசனையைப் பெற வேண்டும் மேலும் இந்த தளத்தில் உள்ள எந்த தகவலையாவது அல்லது இந்த தளம் எந்த மற்ற தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதோ அது சம்மந்தமான ஏதேனும் தகலைச் சார்ந்திருப்பதன் காரணமாகவோ ஏற்பட்ட எந்த இழப்புக்கும் க்ளாக்ஸோஸ்மித்க்ளைன் கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் லிமிடெட் (இந்தியா) பொறுப்பேற்காது.
இந்த தளம் கணினி வைரஸ்கள், கிருமிகள் அல்லது இதர ஆபத்தான அம்சங்கள் இருக்காது என்று GSKCH உத்திரவாதம் அளிக்கவில்லை. இந்த பொருளில் உள்ள செயல்பாடுகள் தடையற்றதாகவோ அல்லது பிழை இல்லாமல் இருக்குமென்றோ அல்லது பிழைகள் கண்டறியப்படும் அல்லது சரிசெய்யப்படும் என்றோ GSKCH உத்திரவாதம் அளிக்காது.
GSKCH மற்றும் சேவ் தி சில்ரன், இந்தியாவிற்கும் இடையில் உள்ள உறவு சம்மந்தமான இழப்பீடு வழங்கும் பொறுப்பு
ஒவ்வொரு தரப்பும் இழப்பீடு வழங்குகின்ற தரப்பினரின் பணியாளர்கள் அல்லது துணை ஒப்பந்ததாரர்கள் கவனக்குறைவான அல்லது வேண்டுமென்றே செய்த தவறான நடத்தையின் காரணமாக ஏற்பட்ட மரணம் உள்ளிட்ட தனிப்பட்ட காயத்தினால் ஏற்படக்கூடிய ஏதேனும் இழப்பு, செலவு மற்றும் கட்டணம் (வழக்கறிஞருக்கான நியாயமான கட்டணம் உள்பட) ஆகியவற்றில் இருந்தும் அதற்கு எதிராகவும் இதர தரப்பினரையும் அவர்களின் துணை நிறுவனங்கள், பணியாளர்கள் மற்றும் துணை ஒப்பந்ததாரர்கள் (“இழப்பீடு வழங்குவோர்”) ஆகியோருக்கு இழப்பீடு வழங்க, பாதுகாக்க மற்றும் ஆபத்தின்றி வைத்திருக்க ஒப்புக் கொள்கின்றனர், அதற்கு பின்வரும் அம்சங்கள் பின்பற்றப்பட வேண்டும்:
1. இழப்பீடு வழங்கும் தரப்பினர் மற்ற தரப்பினர் அல்லது அதன் பணியாளர்கள் அல்லது துணை ஒப்பந்ததாரர்களின் கவனக்குறைவு அல்லது வேண்டுமென்றே செய்த தவறின் காரணமாக ஏற்பட்ட கோரிக்கைக்காக எந்தவித இழப்பீடு கோருவோருக்கும் இழப்பீடு வழங்கக்கூடாது;
2. இழப்பீடு வழங்கும் தரப்பு மற்ற தரப்பினர் ஏதேனும் முதன்மையான ஒப்பந்தத்தை மீறியதன் காரணமாக அல்லது அதன் பணியாளர்கள் அல்லது துணை ஒப்பந்ததாரர்களின் கவனக்குறைவு அல்லது வேண்டுமென்றே செய்த தவறின் காரணமாக ஏற்பட்ட கோரிக்கைக்காக எந்தவித இழப்பீடு கோருவோருக்கும் இழப்பீடு வழங்கக்கூடாது;
3. இந்த பிரிவின் கீழ் எதற்காக இழப்பீடுகள் கோரப்படுகிறதோ அவற்றைப் பற்றி இழப்பீடு வழங்கும் தரப்பினருக்கு முறையாக எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்படும் அதனால் இழப்பீடு வழங்கும் தரப்பினர் தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்வது அல்லது கோரிக்கையை வழங்குவது எந்த வகையிலும் மோசமாக பாதிக்கப்படாது; மேலும்
4. இந்த பிரிவின் கீழ் இழப்பீடு கோருபவர் எதற்காக கோரிக்கையை முன்வைக்கிறாரோ அந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தல் அல்லது அவற்றை வழங்குவதன் மீது இழப்பீடு வழங்கும் தரப்பினருக்கு முழு கட்டுப்பாடு உள்ளது, மேலும் அத்தகைய கோரிக்கைகளின் எதிர்ப்பு அல்லது அவற்றை வழங்குவதில் இழப்பீடு பெறுபவர்கள் இழப்பீடு வழங்கும் தரப்பினருடன் முழுயாக ஒத்துழைப்பார்கள்; ஆனால் எந்த இழப்பீடு பெறுதல் சம்மந்தமாக இந்த இழப்பீடு பெறுபவர் எந்தவிதமான தவறு அல்லது பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமிருக்காது.