


குழந்தைகளுக்கு ஏன் இரும்புச்சத்து தேவை?
பிரசுரிக்கப்பட்ட தேதி: 24 நவம்பர் 2017
ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான முக்கியமான பல்வேறு நுண் ஊட்டச்சத்துக்களில் ஒன்றான – இரும்புச்சத்து, குழந்தைகளின் முறையான வளர்ச்சியில் ஒரு மிக முக்கியமான பங்காற்றுகிறது. பெரும்பாலான வளர்ந்து வரும் நாடுகள் பச்சிளம் குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளில் அதிகமாக காணப்படும் இரும்புச் சத்து குறைபாட்டையும் அது எப்படி பல்வேறு வடிவங்களில் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை பாதிக்கிறது என்பதையும் பார்த்துள்ளனர். அதனால், குழந்தைகளுக்கு ஏன் இரும்புச்சத்து தேவை என்பதை நாம் பார்க்கலாம்:
1. ஒரு ஆரோக்கியமான மூளையைப் பெறுவதற்கு1
பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியமான மூளை வளர்ச்சி ஏற்படுவதற்கு இரும்புச்சத்து தேவை என்பது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் ஆரம்ப நாட்களில் ஏற்படக்கூடிய இரும்புச்சத்து குறைபாடு குழந்தையின் வளர்சிதை மாற்றம், நரம்பின் மேலுறை உருவாக்கம், நரம்புத் தகவல் பரிமாற்றம், மற்றும் ஜீன் மற்றும் புரதத் தோற்றம் போன்றவற்றை மோசமான முறையில் பாதிக்கிறது. அதனால் குழந்தையின் வளர்ச்சியின் போது பல்வேறு நிலைகளில் அவர்களுக்கு இரும்புச்சத்து இணையுணவு வடிவில் வழங்கப்படுவது மிகவும் அவசியமாகும்.
2. ஹீமோகுளோபின் தயாரிக்க குழந்தைகளுக்கு இரும்புச் சத்து தேவைப்படுகிறது2
உடலின் பல்வேறு பாகங்களுக்கு பிராணவாயுவை எடுத்துச் செல்லும் சிவப்பு இரத்த அணுக்களின் (RBC) ஒரு பாகமான ஹீமோகுளோபின் உருவாவதற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு இரத்தசோகை என்ற பாதிப்பு நிலையை ஏற்படுத்துகிறது இதில் குழந்தையின் வளர்ச்சி வேகம் குறைந்து அக்குழந்தை தொடர்ந்து பலகீனமாக உணர்கிறது.
3. முழுமையான அறிவாற்றல், செயல் ஆற்றல் மற்றும் இதர திறன்களுக்கு3
6 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான வயதுடைய குழந்தைகளில் இரும்புச்சத்து குறைபாட்டு இரத்தசோகையினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் அறிவு மற்றும் செயல் ஆற்றலில் குறைபாடு ஏற்படுகிறது. அவர்களுக்கு குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் மோசமான சமூக-உணர்வு சார்ந்த நடத்தைக் குறைபாடு மற்றும் நரம்பியல் உடலியல் சார்ந்த வளர்ச்சிப் பிரச்சனைகளும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.
குழந்தைகளிடையே காணப்படும் இரும்புச்சத்து குறைபாட்டு அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்:4
நீங்கள் சரியான முறையில் கவனம் செலுத்தினால் உங்களது குழந்தைக்கு ஏற்படக்கூடிய இரும்புச்சத்து குறைபாட்டிற்கான ஆரம்பிக்கப்பட்ட அறிகுறிகளை நீங்கள் கண்டறிய முடியும். அந்த அறிகுறிகளில் சருமம் வெளிர் நிறத்தில் இருத்தல், பசியின்மை, மெதுவாக உடல் எடை அதிகரித்தல், எப்போதும் எரிச்சலுடன் அல்லது அழுதுகொண்டே இருத்தல், களைப்பு மற்றும் சோம்பலாக இருத்தல் ஆகியவை அடங்கும். வளர்ந்து வரும் குழந்தைகளில், இதன் குறைபாடு கவனம் செலுத்த இயலாமை மற்றும் குறைந்த நேரத்திற்கு மட்டுமே கவனம் செலுத்தும் நிலை ஆகியவற்றின் காரணமாக கல்வியில் அவர்களது செயல்திறன் மோசமாக பாதிக்கப்படும். அது மட்டுமின்றி, இளம் குழந்தைகளில் இரும்புச்சத்து குறைபாடு நரம்பியில் அறிவாற்றல் சார்ந்த வளர்ச்சி பாதிப்பு மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு பாதிப்பு ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது. இரும்புச் சத்து குறைபாட்டிற்கும் கவனம் செலுத்த இயலாத அளவுக்கு அதிகமாக துறுதுறு என்று இருக்கும் நிலைக்கும் தொடர்பு இருப்பதை ஒருசில ஆய்வுகளில் கண்டறிந்துள்ளன. இந்த பாதிப்பில் குழந்தையின் கவனம் மிகவும் எளிதாக சிதைந்துவிடும், அக்குழந்தை எப்போதும் ஓய்வின்றி இருக்கும், மேலும் திசைகளைப் புரிந்துகொள்ளுதல் போன்ற எளிமையான உணர்வு-அறிவாற்றல் சார்ந்த செயல்களைக் கூட செய்வதற்கு அவை கஷ்டமாக உணரும்.
நகரம் | கடுமையான இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் % | இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் மொத்த % |
ராஜஸ்தான் | 6.7 | 69.7 |
பஞ்சாப் | 6.6 | 66.4 |
ஹரியானா | 4.3 | 72.3 |
உத்திரப் பிரதேசம் | 3.6 | 73.9 |
ஆந்திரப் பிரதேசம் | 3.6 | 70.8 |
குஜராத் | 3.6 | 69.7 |
மத்தியப் பிரதேசம் |
3.4 | 74.1 |
கர்நாடகா |
3.2 | 70.4 |
இரும்புச்சத்துள்ள உணவுப் பொருட்கள்9
நீங்கள் உங்களது குழந்தையின் இரும்புச்சத்து குறைபாட்டினை அவர்களது உணவின் மூலமாக பூர்த்தி செய்ய முடியும். நீங்கள் அதன் உணவில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம்:
மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஈரல், கோழி இறைச்சி, வான்கோழி இறைச்சி போன்ற பல்வேறு இறைச்சி வகைகள்
கொண்டைக்கடலை, பருப்புகள், காய்ந்த பட்டாணி, மொச்சைகள் போன்ற பயறு வகைகள்
கீரை, பச்சைப் பட்டாணி, ப்ரோக்கோலி, முளைவிட்ட பிரஸல்ஸ் போன்ற காய்காறி வகைகள்
முட்டைகள்
மீன்
தானியங்கள்
உங்களது குழந்தைக்கு அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவினை குழந்தைகள் உட்கொள்வதை உறுதி செய்வதன் மூலம், அவர்களின் ஆரோக்கியமான மற்றும் வழக்கமான வளர்ச்சியை நீங்கள் உறுதி செய்வீர்கள். நீங்கள் இரும்புச்சத்துள்ள இணை உணவுகளையும் அவர்களுக்கு வழங்கலாம்.
சுகதாரம் மற்றும் ஊட்டச்சத்து கட்டுரைகள்

-
குறைவான நோய்எதிர்ப்புத் திறன் | அடையாளங்கள் | அறிகுறிகள் | குழந்தையின் நோய்எதிர்ப்பு மண்டலம் | ஹார்லிக்ஸ் இந்தியா
குறைவான நோய்எதிர்ப்புத் திறன் - குழந்தைகளிடம் காணப்படும் குறைவான நோய்எதிர்ப்புத் திறனுக்கான எளிதில் கண்டறியக்கூடிய அறிகுறிகளைப் பாருங்கள். உங்களுடைய குழந்தைகளின் நோய்எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாக உள்ளதா என சீர்தூக்கிப் பாருங்கள். பலவீனமான நோய்எதிர்ப்பு மண்டலத்திற்கான அறிகுறிகள் உள்ளதா எனப் பாருங்கள்.
-
உங்களுடைய குழந்தையின் நோயெதிர்ப்புத் திறனுக்கு உதவ 5 ஆலோசனைகள் | ஊட்டச்சத்து இணை உணவுகள் | ஊட்டச்சத்து நடவடிக்கைகள் | ஹார்லிக்ஸ் இந்தியா
உங்களுடைய குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனுக்கு உதவ 5 ஆலோசனைகள் - வானிலை மோசமடையும் சமயத்தில் சுகாதார நடைமுறைகளுடன் உங்களுடைய குழந்தையின் நோய்எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கான ஊட்டச்சத்து இணை உணவுகள் பற்றிய பயனுள்ள ஆலோசனைகள் ஹார்லிக்ஸ் இந்தியாவின் ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் பற்றிய கட்டுரைகள்.
-
சரியான ஊட்டச்சத்துடன் உங்களுடைய குழந்தையின் நோயெதிர்ப்புத் திறனுக்கு உதவும் | ஹார்லிக்ஸ் இந்தியா
சரியான ஊட்டச்சத்தினை அளித்து உங்களுடைய குழந்தைகளின் நோய்எதிர்ப்புத் திறனுக்கு உதவுங்கள் - உங்களுடைய குழந்தையின் வளர்ச்சித் தேவைகளுக்கும், வேகமாக வளரும் சிந்தனைத் திறனுக்கும் சரியான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. உங்களுடைய குழந்தையின் நோய்எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த சரியான ஊட்டச்சத்தை அளித்து உங்களுடைய குழந்தைகளுக்கு உதவுங்கள்
-
நோயெதிர்ப்புத் திறனும் குழந்தை வளர்ச்சியும் | குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு | ஹார்லிக்ஸ் இந்தியா
நோய்த்எதிர்ப்புத் திறனும் குழந்தைகளின் வளர்ச்சியும் - உங்களுடைய குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும், உகந்த ஆரோக்கியம் மற்றும் சிந்தனை வளர்ச்சிக்கும் தேவையான நோய்எதிர்ப்புத் திறனை எப்படி உயர்த்துவது எனத் தெரிந்து கொள்ளுங்கள். சரியான வளர்ச்சியானது பலமான நோய்எதிர்ப்புத் திறனுடன் இணைந்து செல்ல வேண்டும்.
-
விரைவான காலை உணவு செய்யும் முறைகள் | குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவு | நல்ல ஊட்டச்சத்தை எடுப்பது | ஹார்லிக்ஸ்
விரைவான காலை உணவு தயாரிக்கும் முறைகள் - நாளின் முதல் உணவு, தொடர்ந்து ஒரு சரிவிகித காலை உணவை எடுத்துக்கொள்ளும் குழந்தைகள் நல்ல ஊட்டச்சத்தும் நுண்ணூட்டச்சத்துக்களும் எடுப்பது தெரிகிறது. உங்களுடைய குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை அளிக்க வேண்டும், அதே நேரம் வேகமாகச் செய்ய வேண்டும் என்ற பரபரப்பு இருக்கும் போது உதவக் கூடிய சில விரைவான மற்றும் சுவையான சமையல் குறிப்புகள் இவை.
-
உங்களுடைய குழந்தை ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டிய முக்கியமான 7 உணவுகள் | ஹார்லிக்ஸ் இந்தியா
உங்களுடைய குழந்தை ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டிய முக்கியமான 7 உணவுகள் - ஆரோக்கியமான உணவு என்பது தவறான உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது மட்டும் அல்ல. உங்களுடைய குழந்தை ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டிய முக்கியமான 7 உணவுகளைக் கண்டு பிடியுங்கள்.
-
உங்களுடைய குழந்தைகளின் நோய்எதிர்ப்பு மண்டலத்தை உயர்த்துங்கள் | ஊட்டச்சத்துக்கள் | விட்டமின்கள் | சரிவிகித உணவு | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் » -
குழந்தைகளின் வளர்ச்சியும் மற்றும் மேம்பாடும் | காரணிகள் | ஊட்டச்சத்து | உடல் | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் » -
குழந்தைகளுக்கு ஏன் இரும்புச் சத்து தேவைப்படுகிறது | ஆரோக்கியமான மூளை | குறைபாடு | அடையாளங்கள் | அறிகுறிகள் | உணவு முறை | ஹார்லிக்ஸ்
குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் இரும்புச் சத்து தேவைப்படுகிறது. ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கும் இயல்பான வளர்ச்சிக்கும் குழந்தைகள் இரும்புச் சத்து நிறைந்த உணவை எடுப்பதை உறுதி செய்யுங்கள். உங்களுடைய குழந்தைகளிடம் காணப்படும் இரும்புச்சத்துக் குறைபாட்டின் தொடக்க அறிகுறிகளைக் கண்டறியுங்கள்.
-
குழந்தைகளின் சாப்பிடும் நடத்தை பெற்றோர்களை எப்படிப் பாதிக்கின்றனர் | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் » -
குழந்தைகளுக்கு எப்படி பாலின் பலன்கள் கிடைக்கும் | ஊட்டச்சத்துக்கள் | ஆரோக்கியமான வளர்ச்சி | ஹார்லிக்ஸ்
பால் என்பது ஒரு ஊட்டச்சத்துமிக்க உணவாக பெரும்பாலும் கருதப்படுகிறது. பலமான எலும்புகள் உருவாகவும், குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் விட்டமின்களையும் அது அளிக்கிறது. குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவும் மேம்பாடு அடையவும் பால் எப்படி பயனுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
-
குழந்தைகள் மூளை வளர்ச்சிக்குத் தேவையான மிகச்சிறந்த விட்டமின்கள் | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் » -
கால்சியம் சத்துள்ள குழந்தைகளுக்கான மிகச்சிறந்த உணவுகள் | ஆதாரங்கள் | பால் | கொட்டைகள் | உணவு முறை | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் » -
குழந்தைகளின் நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் வழிகள் | ஊட்டச்சத்துமிக்க உணவுகள் | ஆரோக்கியமான நோய்எதிர்ப்பு மண்டலம் | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் » -
குழந்தைகளிடம் விட்டமின் குறைபாடு | அடையாளங்கள் | அறிகுறிகள் | குழந்தை வளர்ச்சி | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் »
