


பால் எப்படி குழந்தைகளுக்கு பலன் தருகிறது?
பிரசுரிக்கப்பட்ட தேதி: 23 நவம்பர் 2017
பால் ஒரு அத்தியாவசியமான உணவு பரவலாக கருதப்படுகிறது, மேலும் பல தலைமுறைகளாக உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்களில் அவ்வாலே பார்க்கப்பட்டுள்ளது. அது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்கி வருகிறது. ஆனால் இந்த ஊட்டச்சத்துக்கள் எப்படி அவர்களது உடலுக்கு நன்மை செய்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?
எலும்புகளை பலப்படுத்துகிறது
குழந்தைப் பருவத்தில் பலமுள்ள எலும்புகளை உருவாக்கி அவற்றை வயது வந்தவர்களாக ஆகும்வரை அவற்றைப் பராமரிப்பதற்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் பாலில் உள்ளன.
புரதம், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீஷியம், மேங்கனீஸ், துத்தநாகம், வைட்டமின் டி, மற்றும் வைட்டமின் கே போன்ற அனைத்தும் எலும்புகளைப் பராமரிப்பதற்கும் அவற்றின் பாதிப்புகளை சரிசெய்வதற்கும் தேவைப்படுகிறது. மெக்னீஷியம் எவ்வளவு எடுத்துக்கொள்ளப்படுகிறது மற்றும் அது அவ்வளவு உறிஞ்சப்படுகிறது ஆகியவை குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் எலும்பு வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய காரணங்களாக இருப்பது ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வைட்டமின் டி-ஐத் தவிர, மீதமற்றவை குறிப்பிடும்படியான அளவுக்கு பாலில் உள்ளன.
போதுமான அளவுக்கு பால் உட்கொள்ளும் குழந்தைகள் அவர்கள் வயது வந்தோராக வளர்ந்த பின்னர், எலும்புகள் மிகவும் பலகீனமாகி, சிறு துளைகளுடன் உடையும் தன்மையுள்ளதாக மாறக்கூடிய - எலும்பு போறை நோய் போன்ற சுகாதாரப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும்
பாலில் உள்ள பல்வேறு புரதங்களின் காரணமாக, அது சிறந்த முறையில் வாயின் சுகாதாரத்தைப் பராமரிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தினால் பற்சிதைவு தவிர்க்கப்படுகிறது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பற்சிதைவு மற்றும் ஈறுகளில் நோய்கள் பெருகுவதைத்
குழந்தைப்பருவ உடற்பருமன் அபாயத்தைக் குறைக்கிறது
பால் மற்றும் பால் பொருட்கள் அதிகத் தரம்வாய்ந்த புரதம் மற்றும் அத்தியாவசியமான அமினோ அமிலங்களைக் கொண்டவையாகும், அதன் மூலமாக இவை உடல் எடை இழப்பு மற்றும் உடல் எடை பராமரிப்பு சம்மந்தமான சிறப்பான தசை அடர்த்தியைப் பராமரிக்க உதவுகிறது. புளிப்பேற்றப்பட்ட பால் பொருட்களான – பாலாடைக் கட்டி மற்றும் தயிர் – போன்றவை 2ஆம் வகை நீரிழிவு நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைப்பதாக சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன. அதிக அளவு பால் பொருட்களை எடுத்துக் கொள்ளும் குழந்தைகள் குறைவான பால் பொருட்களை எடுத்துக் கொள்வோருடன் ஒப்பிடும்போது 38% குறைவான உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்வார்கள். ஒருமுறை பரிமாறும் அளவுள்ள பால் பொருட்களை கூடுதலாக எடுத்துக்கொள்வது 0.65% குறைவான உடல் கொழுப்பினை உருவாக்குகிறது மேலும் அதிக உடல் எடை அல்லது உடற்பருமன் ஏற்படும் அபாயத்தை 13% குறைக்கிறது.
பால் முழுமையான ஒரு உணவு
பால் என்பது பல்வேறு அம்சங்களைக் கொண்ட முழுமையான உணவாகும் இதில் ஆரோக்கியமான, சமச்சீரான உணவு வழங்கக்கூடிய அனைத்து அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. அதனால், அன்றாடம் பால் உட்கொள்ளும் குழந்தைகள் அவ்வாறு பருகாத குழந்தைகளைக் காட்டிலும் மேம்பட்ட ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.
மேற்கூறிய கருத்துக்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில் பால் முக்கியமானது மற்றும் எந்த பொருளாலும் ஈடு செய்ய முடியாத பங்காற்றுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. அதனால் பெற்றோர்கள் பால் மற்றும் பால் பொருட்கள் குழந்தையின் வழக்கமான உணவில் முக்கியமாக இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் கூடுதல் ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவும் உணவின் சுவையை அதிகரிப்பதற்கும் அத்துடன் பாலின் தரமான ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவும் பால் உணவினை சேர்த்துக்கொள்ளலாம்.
சுகதாரம் மற்றும் ஊட்டச்சத்து கட்டுரைகள்

-
குறைவான நோய்எதிர்ப்புத் திறன் | அடையாளங்கள் | அறிகுறிகள் | குழந்தையின் நோய்எதிர்ப்பு மண்டலம் | ஹார்லிக்ஸ் இந்தியா
குறைவான நோய்எதிர்ப்புத் திறன் - குழந்தைகளிடம் காணப்படும் குறைவான நோய்எதிர்ப்புத் திறனுக்கான எளிதில் கண்டறியக்கூடிய அறிகுறிகளைப் பாருங்கள். உங்களுடைய குழந்தைகளின் நோய்எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாக உள்ளதா என சீர்தூக்கிப் பாருங்கள். பலவீனமான நோய்எதிர்ப்பு மண்டலத்திற்கான அறிகுறிகள் உள்ளதா எனப் பாருங்கள்.
-
உங்களுடைய குழந்தையின் நோயெதிர்ப்புத் திறனுக்கு உதவ 5 ஆலோசனைகள் | ஊட்டச்சத்து இணை உணவுகள் | ஊட்டச்சத்து நடவடிக்கைகள் | ஹார்லிக்ஸ் இந்தியா
உங்களுடைய குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனுக்கு உதவ 5 ஆலோசனைகள் - வானிலை மோசமடையும் சமயத்தில் சுகாதார நடைமுறைகளுடன் உங்களுடைய குழந்தையின் நோய்எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கான ஊட்டச்சத்து இணை உணவுகள் பற்றிய பயனுள்ள ஆலோசனைகள் ஹார்லிக்ஸ் இந்தியாவின் ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் பற்றிய கட்டுரைகள்.
-
சரியான ஊட்டச்சத்துடன் உங்களுடைய குழந்தையின் நோயெதிர்ப்புத் திறனுக்கு உதவும் | ஹார்லிக்ஸ் இந்தியா
சரியான ஊட்டச்சத்தினை அளித்து உங்களுடைய குழந்தைகளின் நோய்எதிர்ப்புத் திறனுக்கு உதவுங்கள் - உங்களுடைய குழந்தையின் வளர்ச்சித் தேவைகளுக்கும், வேகமாக வளரும் சிந்தனைத் திறனுக்கும் சரியான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. உங்களுடைய குழந்தையின் நோய்எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த சரியான ஊட்டச்சத்தை அளித்து உங்களுடைய குழந்தைகளுக்கு உதவுங்கள்
-
நோயெதிர்ப்புத் திறனும் குழந்தை வளர்ச்சியும் | குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு | ஹார்லிக்ஸ் இந்தியா
நோய்த்எதிர்ப்புத் திறனும் குழந்தைகளின் வளர்ச்சியும் - உங்களுடைய குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும், உகந்த ஆரோக்கியம் மற்றும் சிந்தனை வளர்ச்சிக்கும் தேவையான நோய்எதிர்ப்புத் திறனை எப்படி உயர்த்துவது எனத் தெரிந்து கொள்ளுங்கள். சரியான வளர்ச்சியானது பலமான நோய்எதிர்ப்புத் திறனுடன் இணைந்து செல்ல வேண்டும்.
-
விரைவான காலை உணவு செய்யும் முறைகள் | குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவு | நல்ல ஊட்டச்சத்தை எடுப்பது | ஹார்லிக்ஸ்
விரைவான காலை உணவு தயாரிக்கும் முறைகள் - நாளின் முதல் உணவு, தொடர்ந்து ஒரு சரிவிகித காலை உணவை எடுத்துக்கொள்ளும் குழந்தைகள் நல்ல ஊட்டச்சத்தும் நுண்ணூட்டச்சத்துக்களும் எடுப்பது தெரிகிறது. உங்களுடைய குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை அளிக்க வேண்டும், அதே நேரம் வேகமாகச் செய்ய வேண்டும் என்ற பரபரப்பு இருக்கும் போது உதவக் கூடிய சில விரைவான மற்றும் சுவையான சமையல் குறிப்புகள் இவை.
-
உங்களுடைய குழந்தை ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டிய முக்கியமான 7 உணவுகள் | ஹார்லிக்ஸ் இந்தியா
உங்களுடைய குழந்தை ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டிய முக்கியமான 7 உணவுகள் - ஆரோக்கியமான உணவு என்பது தவறான உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது மட்டும் அல்ல. உங்களுடைய குழந்தை ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டிய முக்கியமான 7 உணவுகளைக் கண்டு பிடியுங்கள்.
-
உங்களுடைய குழந்தைகளின் நோய்எதிர்ப்பு மண்டலத்தை உயர்த்துங்கள் | ஊட்டச்சத்துக்கள் | விட்டமின்கள் | சரிவிகித உணவு | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் » -
குழந்தைகளின் வளர்ச்சியும் மற்றும் மேம்பாடும் | காரணிகள் | ஊட்டச்சத்து | உடல் | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் » -
குழந்தைகளுக்கு ஏன் இரும்புச் சத்து தேவைப்படுகிறது | ஆரோக்கியமான மூளை | குறைபாடு | அடையாளங்கள் | அறிகுறிகள் | உணவு முறை | ஹார்லிக்ஸ்
குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் இரும்புச் சத்து தேவைப்படுகிறது. ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கும் இயல்பான வளர்ச்சிக்கும் குழந்தைகள் இரும்புச் சத்து நிறைந்த உணவை எடுப்பதை உறுதி செய்யுங்கள். உங்களுடைய குழந்தைகளிடம் காணப்படும் இரும்புச்சத்துக் குறைபாட்டின் தொடக்க அறிகுறிகளைக் கண்டறியுங்கள்.
-
குழந்தைகளின் சாப்பிடும் நடத்தை பெற்றோர்களை எப்படிப் பாதிக்கின்றனர் | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் » -
குழந்தைகளுக்கு எப்படி பாலின் பலன்கள் கிடைக்கும் | ஊட்டச்சத்துக்கள் | ஆரோக்கியமான வளர்ச்சி | ஹார்லிக்ஸ்
பால் என்பது ஒரு ஊட்டச்சத்துமிக்க உணவாக பெரும்பாலும் கருதப்படுகிறது. பலமான எலும்புகள் உருவாகவும், குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் விட்டமின்களையும் அது அளிக்கிறது. குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவும் மேம்பாடு அடையவும் பால் எப்படி பயனுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
-
குழந்தைகள் மூளை வளர்ச்சிக்குத் தேவையான மிகச்சிறந்த விட்டமின்கள் | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் » -
கால்சியம் சத்துள்ள குழந்தைகளுக்கான மிகச்சிறந்த உணவுகள் | ஆதாரங்கள் | பால் | கொட்டைகள் | உணவு முறை | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் » -
குழந்தைகளின் நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் வழிகள் | ஊட்டச்சத்துமிக்க உணவுகள் | ஆரோக்கியமான நோய்எதிர்ப்பு மண்டலம் | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் » -
குழந்தைகளிடம் விட்டமின் குறைபாடு | அடையாளங்கள் | அறிகுறிகள் | குழந்தை வளர்ச்சி | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் »
