


ஒரு குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை பாதிக்கக்கூடிய காரணிகள்
பிரசுரிக்கப்பட்ட தேதி: 23 நவம்பர் 2017
உங்களது குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதன் உடல் மற்றும் மனம் சந்திக்கும் அனைத்துவிதமான மாற்றங்களும் உள்ளடங்கும். ஒரு பெற்றோர் என்ற முறையில், இந்த மாற்றங்களை முடிவு செய்யும் காரணிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியமாகும்.
உடல் வளர்ச்சி
உங்களது குழந்தையின் உடல் வளர்ச்சியில் உயரம், உடல் எடை, தசைகள் மற்றும் எலும்புகள் வளர்ச்சியடைதல் ஆகியவை அடங்கும். பின்வரும் காரணிகள் ஒரு குழந்தையின் உடல் வளர்ச்சியை பாதிக்கும்:
மரபியல்1
உங்களது குழந்தை உங்களது உடல் குணாதிசயங்கள் அதன் மரபணுக்கள் மூலமாக பெறுகிறது. உங்களது குழந்தை உயரம் சம்மந்தமான ஒரு ஆதிக்கம் நிறைந்த மரபணுவைப் பெற்றிருந்தால், அதுவும் உங்களைப் போன்ற உயரமாக வளரும். எனினும், மரபியல் முறையில் இதய நோய்கள், நீரிழிவு, உடற்பருமன் போன்ற பல்வேறு பாதிப்புகளும் சுகாதார பிரச்சனைகளும் அடுத்த சந்ததிக்குச் செல்கிறது. இந்த பிரச்சனைகள் உங்களது குழந்தையின் உடல் எடை, தசை மற்றும் எலும்பு வளர்ச்சி போன்றவற்றை பாதிக்கலாம்.2
ஊட்டச்சத்து
உங்களது குழந்தையின் முழுமையான உடல் வளர்ச்சிக்கு அதன் உடலுக்கு சரியான அளவில் மாவுச்சத்து, புரதங்கள், வைட்டமின்கள், மற்றும் கனிமங்கள் ஆகியவை தேவைப்படுகிறது. உதாரணமாக, எலும்புகள் வளர்ச்சிக்கு சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் இ நோயெதிர்ப்பு சக்தியின் வளர்ச்சிக்கும், நோயெதிர்ப்புக்கு இரும்புச்சத்தும், உடல் வலிமையைப் பெருக்குவதற்கு புரதமும் மேலும் வெளிச்சமற்ற இடத்தில் நன்றாக பார்வை தெரிவதற்கு வைட்டமின் ஏ-யும் அவசியமானவையாகும். முறையான ஊட்டச்சத்து சரியாக வழங்கப்படவில்லை என்றால் உங்களது குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
சுற்றுச்சூழல்4
நிலம், தண்ணீர் அல்லது உணவின் வாயிலாக ஈயம், மாங்கனீஸ், பாதரசம், ஆர்சனிக் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றின் பாதிப்புக்கு நீண்டகாலமாக ஆட்படுவது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிப்பதாகவும், உடல் குறைபாடுகளை ஏற்படுத்துவதாகவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலகீனப்படுத்துவதாகவும் மேலும் செயல்திறன்களை பாதிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மன மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி
உங்களது குழந்தையின் மன மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் அதன் மூளை, நரம்பியல் செயல்முறைகள், சிந்தனைத் திறன்கள், கற்கும் ஆற்றல்கள் போன்றவற்றின் வளர்ச்சியும் உள்ளடங்கும்.5 ஒரு குழந்தையின் மன மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை பின்வரும் காரணிகள் பாதிக்கின்றன:
ஊட்டச்சத்து6
உங்களது குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால், அது அக்குழந்தையின் மன வளர்ச்சியை மோசமாக பாதிக்கும். உதாரணமாக, அயோடின், இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடுகள் மனவளர்ச்சிக் குறைபாடுகளை ஏற்படுத்துவதோடு மிகவும் அரிதான சூழ்நிலைகளில் நரம்புமண்டலத்தில் சேதத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. ஹார்லிக்ஸ் போன்ற ஊட்டச்சத்து பானங்கள் குழந்தையின் ஊட்டச்சத்துத் தேவைகள் மற்றும் அவை உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்கு இடையில் உள்ள இடைவெளியை சமன்படுத்துகிறது.
சுற்றுச்சூழல்7
குழந்தைகளில் முக்கியமாக 6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஈயம், மாங்கனீஸ், ஆர்சனிக் ஆகியவற்றின் விஷத்தன்மை அறிவாற்றல் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது. பாதரசத்தின் விஷத்தன்மை மொழித் திறன்கள், கவனம் செலுத்துதல் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
உணர்வு சார்ந்த மற்றும் சமுதாய வளர்ச்சி8
ஒரு குழந்தையின் உணர்வு சார்ந்த வளர்ச்சியில் தனது உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல், வெளிப்படுத்துதல் மற்றும் கட்டுக்குள் வைத்தல் ஆகியவை அடங்கும், அதேவேளை சமுதாய வளர்ச்சியில் மற்ற மக்களுடன் அதன் நடத்தையும் உள்ளடங்கும். பின்வரும் காரணிகள் ஒரு குழந்தையின் உணர்வு சார்ந்த மற்றும் சமுதாய வளர்ச்சியை பாதிக்கின்றன:
பெற்றோரின் குழந்தை வளர்ப்பு முறை மற்றும் கலாச்சாரம்
கத்துதல், கடுமையாக தண்டித்தல், அவமானப்படுத்தல் போன்ற கடுமையான பெற்றோரின் குழந்தை வளர்ப்பு முறைகள் – அக்குழந்தையை மிகவும் மாறுபட்டவர்களாக அல்லது உணர்ச்சி வசப்படுபவர்களாக மாற்றுகிறது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, குழந்தையுடன் ஒரு அன்பான, பாசமான, நம்பிக்கையான உறவினை வளர்த்துக்கொள்வது உங்களது குழந்தையை ஒரு உணர்வு ரீதியாக முதிர்ச்சி நிறைந்த நபராக உருவாக்க உதவுகிறது.
கலாச்சார வழக்கங்கள்தான் ஒரு குழந்தையின் சமுதாய உறவுகளைத் தீர்மானிக்கின்றன. உதாரணமாக, பெரும்பாலான கலாச்சாரங்களில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் கோபமாக நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ளப்படுகிறது, அதனால் ஒருசில கலாச்சார அமைப்புகளில் வளர்வதும் ஒரு சிறுவனை அதிக கோபக்காரனாக மாற்றுகிறது.
மேற்கூறிய காரணிகள் உங்களது குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது, அதேவேளை உங்களது குழந்தையை வழிநடத்துவதில் நீங்கள் ஒரு முக்கிய பங்காற்ற முடியும். அதனால், அதன் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நீங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.
சுகதாரம் மற்றும் ஊட்டச்சத்து கட்டுரைகள்

-
குறைவான நோய்எதிர்ப்புத் திறன் | அடையாளங்கள் | அறிகுறிகள் | குழந்தையின் நோய்எதிர்ப்பு மண்டலம் | ஹார்லிக்ஸ் இந்தியா
குறைவான நோய்எதிர்ப்புத் திறன் - குழந்தைகளிடம் காணப்படும் குறைவான நோய்எதிர்ப்புத் திறனுக்கான எளிதில் கண்டறியக்கூடிய அறிகுறிகளைப் பாருங்கள். உங்களுடைய குழந்தைகளின் நோய்எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாக உள்ளதா என சீர்தூக்கிப் பாருங்கள். பலவீனமான நோய்எதிர்ப்பு மண்டலத்திற்கான அறிகுறிகள் உள்ளதா எனப் பாருங்கள்.
-
உங்களுடைய குழந்தையின் நோயெதிர்ப்புத் திறனுக்கு உதவ 5 ஆலோசனைகள் | ஊட்டச்சத்து இணை உணவுகள் | ஊட்டச்சத்து நடவடிக்கைகள் | ஹார்லிக்ஸ் இந்தியா
உங்களுடைய குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனுக்கு உதவ 5 ஆலோசனைகள் - வானிலை மோசமடையும் சமயத்தில் சுகாதார நடைமுறைகளுடன் உங்களுடைய குழந்தையின் நோய்எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கான ஊட்டச்சத்து இணை உணவுகள் பற்றிய பயனுள்ள ஆலோசனைகள் ஹார்லிக்ஸ் இந்தியாவின் ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் பற்றிய கட்டுரைகள்.
-
சரியான ஊட்டச்சத்துடன் உங்களுடைய குழந்தையின் நோயெதிர்ப்புத் திறனுக்கு உதவும் | ஹார்லிக்ஸ் இந்தியா
சரியான ஊட்டச்சத்தினை அளித்து உங்களுடைய குழந்தைகளின் நோய்எதிர்ப்புத் திறனுக்கு உதவுங்கள் - உங்களுடைய குழந்தையின் வளர்ச்சித் தேவைகளுக்கும், வேகமாக வளரும் சிந்தனைத் திறனுக்கும் சரியான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. உங்களுடைய குழந்தையின் நோய்எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த சரியான ஊட்டச்சத்தை அளித்து உங்களுடைய குழந்தைகளுக்கு உதவுங்கள்
-
நோயெதிர்ப்புத் திறனும் குழந்தை வளர்ச்சியும் | குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு | ஹார்லிக்ஸ் இந்தியா
நோய்த்எதிர்ப்புத் திறனும் குழந்தைகளின் வளர்ச்சியும் - உங்களுடைய குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும், உகந்த ஆரோக்கியம் மற்றும் சிந்தனை வளர்ச்சிக்கும் தேவையான நோய்எதிர்ப்புத் திறனை எப்படி உயர்த்துவது எனத் தெரிந்து கொள்ளுங்கள். சரியான வளர்ச்சியானது பலமான நோய்எதிர்ப்புத் திறனுடன் இணைந்து செல்ல வேண்டும்.
-
விரைவான காலை உணவு செய்யும் முறைகள் | குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவு | நல்ல ஊட்டச்சத்தை எடுப்பது | ஹார்லிக்ஸ்
விரைவான காலை உணவு தயாரிக்கும் முறைகள் - நாளின் முதல் உணவு, தொடர்ந்து ஒரு சரிவிகித காலை உணவை எடுத்துக்கொள்ளும் குழந்தைகள் நல்ல ஊட்டச்சத்தும் நுண்ணூட்டச்சத்துக்களும் எடுப்பது தெரிகிறது. உங்களுடைய குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை அளிக்க வேண்டும், அதே நேரம் வேகமாகச் செய்ய வேண்டும் என்ற பரபரப்பு இருக்கும் போது உதவக் கூடிய சில விரைவான மற்றும் சுவையான சமையல் குறிப்புகள் இவை.
-
உங்களுடைய குழந்தை ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டிய முக்கியமான 7 உணவுகள் | ஹார்லிக்ஸ் இந்தியா
உங்களுடைய குழந்தை ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டிய முக்கியமான 7 உணவுகள் - ஆரோக்கியமான உணவு என்பது தவறான உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது மட்டும் அல்ல. உங்களுடைய குழந்தை ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டிய முக்கியமான 7 உணவுகளைக் கண்டு பிடியுங்கள்.
-
உங்களுடைய குழந்தைகளின் நோய்எதிர்ப்பு மண்டலத்தை உயர்த்துங்கள் | ஊட்டச்சத்துக்கள் | விட்டமின்கள் | சரிவிகித உணவு | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் » -
குழந்தைகளின் வளர்ச்சியும் மற்றும் மேம்பாடும் | காரணிகள் | ஊட்டச்சத்து | உடல் | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் » -
குழந்தைகளுக்கு ஏன் இரும்புச் சத்து தேவைப்படுகிறது | ஆரோக்கியமான மூளை | குறைபாடு | அடையாளங்கள் | அறிகுறிகள் | உணவு முறை | ஹார்லிக்ஸ்
குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் இரும்புச் சத்து தேவைப்படுகிறது. ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கும் இயல்பான வளர்ச்சிக்கும் குழந்தைகள் இரும்புச் சத்து நிறைந்த உணவை எடுப்பதை உறுதி செய்யுங்கள். உங்களுடைய குழந்தைகளிடம் காணப்படும் இரும்புச்சத்துக் குறைபாட்டின் தொடக்க அறிகுறிகளைக் கண்டறியுங்கள்.
-
குழந்தைகளின் சாப்பிடும் நடத்தை பெற்றோர்களை எப்படிப் பாதிக்கின்றனர் | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் » -
குழந்தைகளுக்கு எப்படி பாலின் பலன்கள் கிடைக்கும் | ஊட்டச்சத்துக்கள் | ஆரோக்கியமான வளர்ச்சி | ஹார்லிக்ஸ்
பால் என்பது ஒரு ஊட்டச்சத்துமிக்க உணவாக பெரும்பாலும் கருதப்படுகிறது. பலமான எலும்புகள் உருவாகவும், குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் விட்டமின்களையும் அது அளிக்கிறது. குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவும் மேம்பாடு அடையவும் பால் எப்படி பயனுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
-
குழந்தைகள் மூளை வளர்ச்சிக்குத் தேவையான மிகச்சிறந்த விட்டமின்கள் | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் » -
கால்சியம் சத்துள்ள குழந்தைகளுக்கான மிகச்சிறந்த உணவுகள் | ஆதாரங்கள் | பால் | கொட்டைகள் | உணவு முறை | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் » -
குழந்தைகளின் நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் வழிகள் | ஊட்டச்சத்துமிக்க உணவுகள் | ஆரோக்கியமான நோய்எதிர்ப்பு மண்டலம் | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் » -
குழந்தைகளிடம் விட்டமின் குறைபாடு | அடையாளங்கள் | அறிகுறிகள் | குழந்தை வளர்ச்சி | ஹார்லிக்ஸ்
இன்னும் படியுங்கள் »
