AddThis is disabled because of cookie consent

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கான தலைசிறந்த வைட்டமின்கள்
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கான தலைசிறந்த வைட்டமின்கள்

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கான தலைசிறந்த வைட்டமின்கள்

நமது மூளை மிகவும் தனித்தன்மை கொண்ட ஒரு உறுப்பாகும், அது சரியாக வளர்ச்சியடையவில்லை என்றால் பல்வேறு நரம்பியல் மற்றும் மனவளர்ச்சி நோய்களுக்கு ஆளாக நேரிடலாம். மூளை வளர்ச்சியின் பெரும்பான்மையான பகுதி குழந்தைப்பருவத்தின் ஆரம்பக் காலங்களில் நடைபெறுகிறது அதனால் உங்களது குழந்தையின் உணவு அப்போது மிகவும் முக்கியமாக பங்காற்றுகிறது.

வைட்டமின்கள் மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை என்பது உங்களுக்கு தெரிந்தாலும், இந்த வைட்டமின்கள் உண்மையின் அப்படி என்ன செய்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் இப்போது ஒருசில வைட்டமின்கள் ஆற்றும் பங்கினை இங்கு பார்க்கலாம்:

வைட்டமின் ஏ1

வைட்டமின் ஏ-இன் மிகவும் பொதுவான பணி கண்பார்வையை மேம்படுத்துவதாகும். எனினும், மனவளர்ச்சி செயல்பாடுகளில் அந்த வைட்டமின்களின் பங்கு என்ன என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். வைட்டமின் ஏ வளர்ந்து வரும் குழந்தைகளிடையே பல்வேறு நரம்பியல் செயல்முறைகளை சீராக்குகிறது. வைட்டமின் ஏ குறைபாடு (VAD) என்பது உலகெங்கிலும் மிகவும் பொதுவாக காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டு பாதிப்பாகும். உணவின் வாயிலாக இணையாக வழங்கப்படும் வைட்டமின் ஏ குழந்தைகளின் கற்றல் மற்றும் நினைவாற்றலில் மிகவும் சிறந்து பங்காற்றுவது கண்டறியப்பட்டுள்ளது.

வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட்டுகள்2

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய வைட்டமின் பி12 குறைபாடு மூளை வளர்ச்சியை பாதிப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஃபோலேட் குறைபாடு நரம்புக்குழாய் குறைபாடுகளுக்கு காரணமாக அமைகிறது. குழந்தையின் வாழ்வில் முதல் இரண்டு வருடங்களில் அதன் மூளை வளர்ச்சி அதிக விரைவாக ஏற்படுகிறது. அத்தகைய சமயத்தில் ஏற்படக்கூடிய முக்கியமான ஊட்டச்சத்து குறைபாடுகள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் அவர்களில் செயல்படக்கூடிய ஆற்றலின் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, முக்கியமாக உயர் சிந்தனை திறன் சம்மந்தமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எந்த குழந்தைகளுக்கு போதுமான அளவு வைட்டமின் பி12ல் கிடைக்கிறதோ அவர்கள் அதன் குறைபாடுள்ள குழந்தைகளோடு ஒப்பிடும்போது அறிவாற்றல் பரிசோதனைகளில் சிறப்பாக செயல்படுகின்றனர்.

வைட்டமின் டி3

வைட்டமின் டி எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமானது என்பது நிரூபிக்கப்பட்ட விஷயம் என்றாலும், குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சிக்கும் இது முக்கியமானதாக கண்டறியப்பட்டுள்ளது. மூளையின் திசுக்களில் வைட்டமின் டி-யை கிரகிக்கக்கூடிய செல்கள் நிறைய காணப்படுகிறது. மேலும் இந்த வைட்டமின் குறைவான அளவில் கிடைத்தால் அது பிற்காலத்தில் அல்ஸைமர் நோய்கள் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வைட்டமின் இ4

சுதந்திரமான மூலக்கூறுகள் எனப்படுபவை மூளையின் செல்களின் செயல்பாடுகளை பாதிக்கக்கூடிய மூலக்கூறுகள் ஆகும். வைட்டமின் இ என்பது ஒரு முக்கியமான ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாகும். அதன் முக்கியமான பணியே சுதந்திரமான மூலக்கூறுகள் ஏற்படுத்தும் சேதத்தில் இருந்து செல்களைப் பாதுகாப்பதே ஆகும். குழந்தைகள் வளரும்போது, அவர்களது மூளைகள் இத்தகைய சுதந்திர மூலக்கூறுகளால் பாதிப்படைவதற்கு அதிக வாய்ப்புள்ளது, அதன் காரணமாக அவர்கள் வயது வந்தவர்களாக ஆகும்போது அவர்களுக்கு நரம்புச் சிதைவு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நீங்கள் பார்த்தது போல், ஒரு குழந்தையின் வாழ்வில் ஆரம்பம் முதல் வைட்டமின்கள் ஒரு முக்கியமான பங்காற்றுகின்றன. வைட்டமின் இ உணவில் குறைவாக இருந்தால், மற்ற உடல் பாதிப்புகளைக் காட்டிலும் அது உங்களது குழந்தையின் மூளை வளர்ச்சியையே பாதித்துவிடும். அதனால் உங்களது குழந்தைகள் பெறும் உணவில் போதுமான அளவுக்கு வைட்டமின்கள் இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமாகும்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

மூளை வளர்ச்சிக்கான வைட்டமின்கள், குழந்தைகளின் மூளை வளர்ச்சி

சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து கட்டுரைகள்