AddThis is disabled because of cookie consent

உங்களது குழந்தைகள் அன்றாடம் சாப்பிட வேண்டிய 7 முக்கியமான உணவுகள்
உங்களது குழந்தைகள் அன்றாடம் சாப்பிட வேண்டிய 7 முக்கியமான உணவுகள்

உங்களது குழந்தைகள் அன்றாடம் சாப்பிட வேண்டிய 7 முக்கியமான உணவுகள்

Eating Every Day

ஒரு ஆரோக்கியமான உணவு என்றால் தவறான உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது மட்டுமல்ல, ஆனால் நல்ல பொருட்களை சரியான அளவில் சேர்த்துக்கொள்வதும் அதில் அடங்கும். உங்களது குழந்தைகள் அன்றாடம் சாப்பிட வேண்டிய முக்கியமான 7 உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1. முட்டைகள்

புரதம் நிறம்பப்பெற்ற அற்புதமான பொருளான முட்டை, இயற்கையாகவே வைட்டமின் டி கொண்ட ஒரு உணவுப் பொருளாகும், ஆனால் இதனை பல்வேறு சுவை மிக்க உணவுகளாக தயாரிக்க முடியும் என்பது இதிலுள்ள சுவாரஸ்யமான அம்சமாகும்.

2. பால் பொருட்கள்

பால் மற்றும் பால் பொருட்கள் மாவுச்சத்து, புரதம் மற்றும் அத்தியாவசியமான வைட்டமின்கள் (ஏ, பி12, ரிபோஃப்ளேவின் மற்றும் நியாஸின்) மற்றும் – சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், மற்றும் பொட்டாஷியம் போன்ற கனிமங்களையும் நிரம்பப் பெற்ற பொருளாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் யாவும் உங்களது குழந்தையின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான மேம்பாட்டிற்கும் அவசியமானதாகும். சுண்ணாம்புச்சத்தை கிரகித்துக் கொள்வதிலும், சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தியிலும், வளர்சிதை மாற்றத்திலும், நல்ல கண் பார்வை அளிப்பதிலும், இரத்த சுழற்சியிலும் இந்த வைட்டமின்கள் உதவி செய்கின்றன. இதன் கனிமங்கள் எலும்புகளை வலுப்படுத்தவும் உடலின் திரவ சமநிலையையும் சாதாரணமான இரத்த அழுத்தத்தையும் பராமரிப்பதற்கும் உதவி செய்கிறது. ஒருவேளை உங்களது குழந்தை அதற்கு கொடுக்கும் ஒரு டம்லர் பால் அல்லது தயிரை முழுமையாக குடிக்கவில்லை என்றால், ஒரு ஸ்பூன் ஹார்லிக்ஸை சேர்ப்பது குறித்து நீங்கள் யோசிக்கலாம். ஹார்லிக்ஸ் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது அருமையான சுவையைக் கூட்டுவதோடு மட்டுமல்லாமல் கூடுதல் ஊட்டச்சத்தையும் வழங்குகிறது. 

3. ஓட்மீல்

ஓட்ஸ் கஞ்சி புரதம் நிறைந்த ஒரு உணவு மட்டுமல்ல, அது குறைவான கொழுப்பு அளவையும் கொண்டுள்ளது! இது காலையுணவு மற்றும் மதிய உணவு ஆகிய இரண்டுக்குமே பொருத்தமானது, மேலும் உங்களுக்கு ஏற்படக்கூடிய அகோரப் பசியை நாள் முழுவதும் கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் படைத்ததாகும்.

4. ப்ளூபெர்ரீஸ்

மில்க் ஷேக்கிலோ அல்லது ஒரு கிண்ணத்தில் வைத்து தனியாகவோ சாப்பிடக்கூடிய இந்த சிறிய பழம் சிறந்த ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாகும். இது இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதாகவும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

5. கொட்டைகள்

பல்வேறு கொட்டைகளின் கலவை உங்களது குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு மிகவும் அவசியமான தாவர புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ‘நல்ல’ கொழுப்புகள் ஆகிய அனைத்தையும் வழங்கக்கூடியதாகும்.

6. மீன்

பெற்றோர் பெரும்பாலும் இந்த உணவை தங்களது குழந்தையின் உணவில் இருந்து தவிர்த்துவிடுவார்கள், ஆனால் மீன் இந்தியர்கள் பெரும்பாலும் குறைபாட்டுடன் காணப்படும் வைட்டமின் டி அதிகம் கிடைக்கும் உணவாகும், மேலும் இதில் உங்களது குழந்தையின் மூளை முறையாக செயல்படுவதற்கும் பல்வேறு முக்கியமான நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கும் முக்கியமான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் உள்ளது.

7. அனைத்து பச்சைக் காய்கறிகள்!

உங்களது குழந்தையின் உணவில் எப்படியாவது சில காய்கறிகளை சேர்த்துக் கொடுக்க முயற்சி செய்யுங்கள் ஏனெனில் அதற்கு நல்ல பலன் கிடைக்கும் என்று நாங்கள் உறுதியாக சொல்கிறோம். பச்சைக் காய்கறிகளில் நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி மற்றும் பெட்டாஷியம் ஆகியவை அதிகம் உள்ளது. இவை ஜீரணத்தை வேகப்படுத்துவதுடன், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தி முக்கியமான நோய்கள் ஏற்படக்கூடிய அபாயத்தையும் குறைக்கிறது. முட்டைகோஸ், கேல் மற்றும் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகள் விஷயத்தன்மை கொண்ட பொருட்களை நொதிகளை உருவாக்கி அவற்றின் மூலம் அதை உடலில் இருந்து வெறியேற்ற வல்லவையாகும். 
குழந்தையின் ஆரம்ப காலங்கள்தான் ஒரு அரோக்கியமான ஜீரண மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவதற்கான முக்கியமான காலமாகும், அதனால் உங்களது குழந்தையின் அனைத்து ஊட்டச்சத்து கனவும் நனவாவதை உறுதி செய்யுங்கள்!

சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து கட்டுரைகள்