AddThis is disabled because of cookie consent

சரியான ஊட்டச்சத்தின் மூலமாக உங்களது குழந்தையின் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவுங்கள்
சரியான ஊட்டச்சத்தின் மூலமாக உங்களது குழந்தையின் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவுங்கள்

சரியான ஊட்டச்சத்தின் மூலமாக உங்களது குழந்தையின் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவுங்கள்

Right Immunity

உங்களது பிரியமான குழந்தையை உங்களது கைகளில் முதல் முறையாக வாங்கியது நோற்றுதான் நடந்தது போல் இருந்தது. ஆனால் ஒருசில ஆண்டுகளில், உங்களது குழந்தை அனைத்து விஷயங்களையும் தானாகவே செய்வதோடு மட்டுமல்லாமல், வகுப்பாக இருந்தாலும் சரி மைதானமாக இருந்தாலும் சரி சுய-ஊக்கம் பெற்று வெற்றி பெறும் முடிவோடு செயல்படுகிறது.  

ஆனால் தற்சமயம் சுற்றுச்சூழல் மாசு, சரியான உணவு கிடைக்காமல் இருத்தல், கிருமிகளின் பாதிப்புக்கு ஆளாதால் போன்றவை அவர்களின் வளர்ச்சியை கெடுப்பதோடு, நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் உங்களது குழந்தையின் ஆற்றலையும் பாதிக்கின்றன. அதாவது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலகீனப்படுத்துகின்றன. இங்குதான் உங்களது குழந்தை பாதிப்பக்கு உள்ளாக அதிக வாய்ப்புள்ளது மேலும் அவர்களின் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவக்கூடிய சரியான ஊட்டச்சத்துடன் உங்களது அன்பும் பராமரிப்பும் அவர்களுக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது.

அவற்றின் பின்னணியில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி

பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்று ஏற்படுத்தும் புற காரணிகளில் இருந்தும் அல்லது ஆன்டிஜென்கள் எனப்படும் நோய் ஏற்படுத்தும் காரணிகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளும் உடலின் ஆற்றல்தான் நோயெதிர்ப்பு சக்தியாகும். இந்த வெளிப்புற பாதிப்பு ஏற்படுத்தும் காரணிகள் உடலுக்குள் நுழைகின்றன, மேலும் ஆரம்ப நிலையில் சருமம் மற்றும் சளி போன்ற பாதுகாப்பு நிலைகள் மூலமாக தடுக்கப்படுகின்றன. உடலில் உள்ள அந்த ஆரம்பநிலைத் தடுப்பை தாண்டி நோய் ஏற்படுத்தும் காரணிகள் காரணமாக அக்குழந்தைக்கு நோய்க்கு ஆளாகுமா என்பது அதன் நோயெதிர்ப்பு மண்டலம் எந்த அளவுக்கு வலிமையாக உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும்.

ஆன்டிஜென்கள் உடலுக்குள் நுழையும்போது, இரத்த ஓட்டத்தில் உள்ள ஆன்டிபாடிக்கள் மற்றும் நொதிகளை உற்பத்தி செய்யும் நோயெதிர்ப்பு செல்களான டி-செல்கள் மற்றும் பி-செல்கள் இந்த வெளி பாதிப்புக் காரணிகளை எதிர்த்து அவற்றைக் கொல்கிறது. எனினும், இந்த நோய்க் காரணிகள் தொடர்ந்து நமது உடலைத் தாக்கிக் கொண்டே இருந்தால், அது இந்த டி-செல்கள் மற்றும் பி-செல்களை பலகீனமாக்கிவிடும், அதன் காரணமாக நோயெதிர்ப்பு மண்டலமும் பலகீனமாகிவிடும். இங்குதான் நல்ல ஊட்டச்சத்து ஒரு முக்கிய பங்காற்றுகிறது. 

ஊட்டச்சத்தின் பங்கு

போதுமான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்வது நோயெதிர்ப்பு செல்களான டி-செல்கள் மற்றும் பி-செல்களை தொடர்ந்து நோயை எதிர்ப்புப் போராடும் ஆன்டிஜென் பொருட்களை உற்பத்தி செய்ய வைத்து செல்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதிலும் உதவி செய்கிறது1.

துத்தநாகம், செலினியம், இரும்புச்சத்து, தாமிரம், மற்றும் வைட்டமின் ஏ, சி, டி, இ, பி-6, பி-12 மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற நுண் ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு செயல்பாட்டில் குறிப்பிடும்படியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன2. இவை நோயெதிர்ப்பு செல்கள் பிரிவதிலும் அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதிலும் மேலும் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வதிலும் உதவி செய்வதால் இவை நமது உடலுக்கு அவசியமானவை ஆகின்றன. ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டல செல்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன, அதன் மூலமாக நோய்களை ஏற்படுத்தும் ஆன்டிஜென்களுக்கு மிகப்பெரிய எதிர்சக்தியாக அவை உருவெடுகின்றன. 

சரியான ஊட்டச்சத்து

உங்களது குழந்தையின் வளர்ச்சி மற்றும் வேகமாக வளர்ந்து வரும் அவர்களின் அறிவாற்றல் திறன்களுக்கு சரியான ஊட்டச்சத்தினை எடுத்துக்கொள்வது அவசியமாகும். இந்த போட்டி நிறைந்த உலகில், தாய்மார்கள் நடப்பது நடக்கட்டும் என்று சாதாரணமாக விட்டுவிட முடியாது. தாய்மார்களாக நீங்கள் உங்களது குழந்தை சாப்பிடும் உணவு பசியைப் போக்குவதாக மட்டுமே இருக்கக்கூடாது, ஆனால் ஒரு வலிமையான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க வேண்டும், அவர்களின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் மேலும் அவர்களது வாழ்வில் உள்ள அனைத்து விஷயங்களிலும் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சுகதாரம் மற்றும் ஊட்டச்சத்து கட்டுரைகள்