AddThis is disabled because of cookie consent

குழந்தைகளிடம் காணப்படும் வைட்டமின் குறைபாட்டின் 5 அறிகுறிகள்
குழந்தைகளிடம் காணப்படும் வைட்டமின் குறைபாட்டின் 5 அறிகுறிகள்

உங்களது குழந்தைகள் மிகவும் விரும்பக்கூடிய 5 விரைவான காலையுணவு சமையல் குறிப்புகள்

நாளின் முதல் உணவான – காலையுணவு – ஒரு நாளின் மிகவும் முக்கியமான உணவாக வெகு காலமாக ஏற்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு சமச்சீரான காலையுணவினை சாப்பிடும் குழந்தைகள் சாதகமான ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துகளைப் பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. குழந்தையின் விரைவான வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்காற்றுகின்ற ஒரு ஆரோக்கியமான காலையுணவு அவர்களது நடத்தை, அறிவாற்றல் மற்றும் கல்வியில் அவர்களது செயல்திறனையும் நேர்மறையாக பாதிக்கிறது.

ஆனால் உங்களது குழந்தையை ஒரு ஆரோக்கியமான காலையுணவு சாப்பிட வைப்பது கடினமாக காரியமாக இருக்கலாம். ஒருசில நாட்கள் ஒரு விரிவான காலையுணவை சமைக்க உங்களுக்கு நேரம் இல்லாமல் போகலாம், மற்ற நாட்களில், உங்களது குழந்தைகள் மிகவும் அடம்பிடித்துக் கொண்டு சாப்பிட மறுத்துவிடலாம்.

உங்களுக்கு நேரம் மிகவும் குறைவாக இருந்து உங்களது குழந்தைக்கு ஒரு ஆரோக்கியமான உணவை வழங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் போது உங்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்தைப் போக்கக்கூடிய வகையில் ஒருசில விரைவான மற்றும் சுவையான உணவு சமையல்முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

பீநட் பட்டர் டோஸ்டுடன் ஒரு டம்ளர் பால்

இரண்டு துண்டு பிரௌன் பிரட்டை டோஸ்ட் செய்து அதன் ஒவ்வொன்றிலும் அரை தேக்கரண்டி பீநட் பட்டரை தடவிடுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவுதான்! இதனை ஒரு டம்ளர் பாலுடன் கொடுங்கள். இந்த சுவைமிக்க சிற்றுண்டியைத் தருவதன் மூலமாக உங்களது குழந்தைக்கு பாதி நாளுக்கத் தேவையான ஊட்டச்சத்து தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்துவிட்டீர்கள்!

காய்கறி பன்னீர் சாண்விச்

குழந்தைகளுக்கு பன்னீர் என்றால் மிகவும் பிடிக்கும். கொஞ்சம் பன்னீரை மசித்து அதில் சுவைக்காக கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை இரண்டு பிரட் துண்டுகள் மீது தடவுங்கள், சிறிதளவு காய்கறிகளைச் சேருங்கள். இதனை சாண்விச் தயாரிக்கும் சாதனத்தில் 2 – 3 நிமிடங்களுக்கு வைத்திருங்கள். உங்களது குழந்தைக்கு பிரட்டில் இருந்து நார்ச்சத்தும் மாவுச்சத்தும் கிடைக்கும், பன்னீரில் இருந்து புரதமும், காய்கறிகளில் இருந்து வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் – என இவை அனைத்தும் 10 நிமிடங்களுக்குள் கிடைக்கும்.

பால் இணையுணவுகள்/ஸ்மூதீஸ்

பால் இணையுணவுகள் அல்லது ஸ்மூதீஸ் உங்களது குழந்தையின் காலையுணவில் சில முக்கியமான ஊட்டச்சத்துக்களை சேர்ப்பதற்கான சிறந்த வழியாகும். நீங்கள் கொடுக்கும் பாலில் அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக பழங்கள் அல்லது ஹார்லிக்ஸ் போன்ற அறைக்கப்பட்ட தானியப் பொருட்களைச் சேர்த்து உங்களது குழந்தைகள் அவற்றை சந்தோஷமாக பருகுவதைப் பார்த்து ரசிக்கலாம்! 

முட்டை சாண்விச்

ஒரு ஆம்லேட்டை தயாரித்திடுங்கள் அல்லது சில முட்டைகளை பொறியலாக்குங்கள். இவற்றை ஒரு பிரட்டில் வைத்து கொஞ்சம் பாலாடைக்கட்டியை சேர்த்திடுங்கள். இந்த சாண்விச்சை  5 நிமிடங்களில் தயார் செய்யலாம் மேலும் இது புரதம் மற்றும் மாவுச்சத்து நிறைந்த சிறப்பாக சக்திமிக்க உணவாகும்.

சப்பாத்தி ரோல்கள்

ஒரு ரோலில் உள்ள சிறந்த விஷயம் என்னவென்றால் இதனை பயணம் செய்யும்பேதும் எளிதாக சாப்பிடலாம் மேலும் நீங்கள் இதற்குள் வைப்பதற்கு – காய்கறிகள், பழங்கள், கோழி இறைச்சி, பீநட் பட்டர், மற்றும் ஜாம் என்று எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் – அதன் காரணமாக இது சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். 10 நிமிடங்களில், உங்களது குழந்தைக்கு நாள் முழுவதும் சக்தியைத் தரக்கூடிய இரண்டு ஊட்டச்சத்து நிறைந்த ரோல்களைத் தயாரித்துவிட முடியம்.

மேற்கூறிய அனைத்து உணவு முறைகளுமே உங்களது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஏனெனில் இவற்றின் சுவை மிகவும் சிறப்பாக இருக்கும். இவை உங்களது குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்கும், அதனால் நீங்கள் அதை தாராளமாக நம்பலாம்! அவர்களின் அன்றாட காலை உணவில் ஒரு டம்ளர் பாலை சேர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. பால் ஒரு முழுமையான உணவாகும். இதில் சுண்ணாம்புச்சத்து நிரம்பியிருப்பது மட்டுமல்ல மற்ற ஊட்டச்சத்துக்களையும் இது உடலுக்கு வழங்குகிறது. எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்துவது முதல், வாய் அரோக்கியத்தைப் பராமரிப்பது வரை, பால் அனைத்து விதமான செயல்களையும் சிறப்பாக செய்கிறது. வேறு என்ன வேண்டும், பாலில் ஹார்லிக்ஸ் போன்ற தானியப் பொடியில் இருந்து தயாரிக்கப்பட்ட இணையுணவுகளை சேர்ப்பதன் மூலமாக அதை இன்னும் சுவையுள்ளதாக மாற்ற முடியும்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

காலையுணவு சமையல், அரோக்கியமான ஷேக்குகள்

சுகதாரம் மற்றும் ஊட்டச்சத்து கட்டுரைகள்