AddThis is disabled because of cookie consent

பால் எப்படி குழந்தைகளுக்கு பலன் தருகிறது?
பால் எப்படி குழந்தைகளுக்கு பலன் தருகிறது?

பால் எப்படி குழந்தைகளுக்கு பலன் தருகிறது?

பால் ஒரு அத்தியாவசியமான உணவு பரவலாக கருதப்படுகிறது, மேலும் பல தலைமுறைகளாக உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்களில் அவ்வாலே பார்க்கப்பட்டுள்ளது. அது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்கி வருகிறது. ஆனால் இந்த ஊட்டச்சத்துக்கள் எப்படி அவர்களது உடலுக்கு நன்மை செய்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

எலும்புகளை பலப்படுத்துகிறது

குழந்தைப் பருவத்தில் பலமுள்ள எலும்புகளை உருவாக்கி அவற்றை வயது வந்தவர்களாக ஆகும்வரை அவற்றைப் பராமரிப்பதற்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் பாலில் உள்ளன.

புரதம், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீஷியம், மேங்கனீஸ், துத்தநாகம், வைட்டமின் டி, மற்றும் வைட்டமின் கே போன்ற அனைத்தும் எலும்புகளைப் பராமரிப்பதற்கும் அவற்றின் பாதிப்புகளை சரிசெய்வதற்கும் தேவைப்படுகிறது. மெக்னீஷியம் எவ்வளவு எடுத்துக்கொள்ளப்படுகிறது மற்றும் அது அவ்வளவு உறிஞ்சப்படுகிறது ஆகியவை குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் எலும்பு வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய காரணங்களாக இருப்பது ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வைட்டமின் டி-ஐத் தவிர, மீதமற்றவை குறிப்பிடும்படியான அளவுக்கு பாலில் உள்ளன.

போதுமான அளவுக்கு பால் உட்கொள்ளும் குழந்தைகள் அவர்கள் வயது வந்தோராக வளர்ந்த பின்னர், எலும்புகள் மிகவும் பலகீனமாகி, சிறு துளைகளுடன் உடையும் தன்மையுள்ளதாக மாறக்கூடிய - எலும்பு போறை நோய் போன்ற சுகாதாரப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். 

வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும்

பாலில் உள்ள பல்வேறு புரதங்களின் காரணமாக, அது சிறந்த முறையில் வாயின் சுகாதாரத்தைப் பராமரிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தினால் பற்சிதைவு தவிர்க்கப்படுகிறது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பற்சிதைவு மற்றும் ஈறுகளில் நோய்கள் பெருகுவதைத்

குழந்தைப்பருவ உடற்பருமன் அபாயத்தைக் குறைக்கிறது

பால் மற்றும் பால் பொருட்கள் அதிகத் தரம்வாய்ந்த புரதம் மற்றும் அத்தியாவசியமான அமினோ அமிலங்களைக் கொண்டவையாகும், அதன் மூலமாக இவை உடல் எடை இழப்பு மற்றும் உடல் எடை பராமரிப்பு சம்மந்தமான சிறப்பான தசை அடர்த்தியைப் பராமரிக்க உதவுகிறது. புளிப்பேற்றப்பட்ட பால் பொருட்களான – பாலாடைக் கட்டி மற்றும் தயிர் – போன்றவை 2ஆம் வகை நீரிழிவு நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைப்பதாக சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன. அதிக அளவு பால் பொருட்களை எடுத்துக் கொள்ளும் குழந்தைகள் குறைவான பால் பொருட்களை எடுத்துக் கொள்வோருடன் ஒப்பிடும்போது 38% குறைவான உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்வார்கள். ஒருமுறை பரிமாறும் அளவுள்ள பால் பொருட்களை கூடுதலாக எடுத்துக்கொள்வது  0.65% குறைவான உடல் கொழுப்பினை உருவாக்குகிறது மேலும் அதிக உடல் எடை அல்லது உடற்பருமன் ஏற்படும் அபாயத்தை 13% குறைக்கிறது.

பால் முழுமையான ஒரு உணவு

பால் என்பது பல்வேறு அம்சங்களைக் கொண்ட முழுமையான உணவாகும் இதில் ஆரோக்கியமான, சமச்சீரான உணவு வழங்கக்கூடிய அனைத்து அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. அதனால், அன்றாடம் பால் உட்கொள்ளும் குழந்தைகள் அவ்வாறு பருகாத குழந்தைகளைக் காட்டிலும் மேம்பட்ட ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

மேற்கூறிய கருத்துக்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில் பால் முக்கியமானது மற்றும் எந்த பொருளாலும் ஈடு செய்ய முடியாத பங்காற்றுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. அதனால் பெற்றோர்கள் பால் மற்றும் பால் பொருட்கள் குழந்தையின் வழக்கமான உணவில் முக்கியமாக இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் கூடுதல் ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவும் உணவின் சுவையை அதிகரிப்பதற்கும் அத்துடன் பாலின் தரமான ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவும் பால் உணவினை சேர்த்துக்கொள்ளலாம்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

குழந்தைகளுக்கு பாலின் பலன்கள், பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

சுகதாரம் மற்றும் ஊட்டச்சத்து கட்டுரைகள்