AddThis is disabled because of cookie consent

குறைவான நோயெதிர்ப்பு சக்தி
குறைவான நோயெதிர்ப்பு சக்தி

குறைவான நோயெதிர்ப்பு சக்தி – எளிதாக கண்டுபிடிக்கக் கூடிய இந்த அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளை கவனியுங்கள் 

ஒரு பெற்றோராக, உங்களது குழந்தையின் அரோக்கியம் குறித்த அளவுக்கு அதிகமான ஆர்வம் ஏற்படுவது பொதுவானதுதான். இப்போது உள்ள சுற்றுச்சூழல் மாசு மற்றும் உணவுக் கலப்படம் போன்ற சூழ்நிலைகளில், கடுமையான கிருமிகளுக்கு உங்களது குழந்தை இலக்காகி நோய்வாய்ப்படாமல் அவர்களைக் காப்பது என்பதே ஒரு மிகப்பெரிய பணியாகும். 

இங்குதான் புறக் காரணிகளுக்கு எதிரான வலிமையான நோயெதிர்ப்பு சக்தி ஒரு முக்கிய பங்காற்றுகிறது. எப்போதாவது நோய்வாய்ப்படுவது என்பது சாதாரணமானதுதான். ஒருவேளை உங்களது குழந்தை அதற்கு ஏற்படக்கூடிய தொற்றுகளைக் காட்டிலும் அதிகமான தொற்றுகளுக்கு ஆளானால், அதன் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏதோ பிரச்சனையாக இருக்கலாம்.

 

உங்களது குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லை என்பதை எப்படி நீங்கள் மதிப்பிடுவீர்கள்?

ஒரு பலகீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தின் அறிகுறிகள் யாதெனில்:


1. சுவாசமண்டலத் தொற்றுகள் அடிக்கடி மீண்டும் மீண்டும் ஏற்படுதல் :
போன்ற சளி மற்றம் காய்ச்சல்.
2. தாமதமாக குணமடைதல்:
ஒரு குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, சாதாரண காயம் கூட குணமடையா நீண்டகாலம் ஆகும்.
3. உடல் எடை அதிகரிக்கத் தவறுதல்:
மோசமான வளர்ச்சி மற்றும் உடல் எடை குறைந்த நிலை ஆகியவை மோசமான நோயெதிர்ப்பினை குறிப்பிடக்கூடிய எச்சரிக்கை குறியீடுகளாகும்.
4. ஊட்டச்சத்து குறைபாடுகள்:

ஒரு பலகீனமான நோயெதிர்ப்பு மண்டலம் குழந்தைகளில் மோசமான ஊட்டச்சத்து நிலையை உருவாக்குகிறது. சரும மற்றும் தலைமுடி மாற்றங்கள், எளிதில் உடைகின்ற நகங்கள், எளிதாக காயமடைதல் மற்றும் குறைவான நேரத்திற்கு மட்டுமே கவனம் செலுத்தும் தன்மை போன்ற வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊட்டச்சத்து குறைபாடுகள் மோசமான நோயெதிர்ப்பு சக்தியை மிகவும் தெளிவாக குறிப்பிடும் அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகளில் பெரும்பாலானவற்றை உங்களது குழந்தை வெளிப்படுத்தினால், அது குழந்தையின் உடலில் மோசமான நோயெதிர்ப்பு மண்டலத்தை குறிப்பிடுவதாக இருக்கலாம். ஆனால் நீங்களாகவே எந்தவிதமான முடிவுக்கும் வருவதற்கு முன்னால்,  பலகீனமான நோயெதிர்ப்பு சக்திக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களின் குறைபாடு என்பது முக்கியமான காரணமாக இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஊட்டச்சத்து என்பது ஒரு ஆரோக்கியமான நோயெதிர்ப்பு சக்தியை முடிவு செய்யும் முக்கியமான காரணியாகும். ஊட்டச்சத்து குறைபாடுதான் உலகெங்கிலும் நோயெதிர்ப்புக் குறைபாட்டிற்கான பொதுவான காரணமாக உள்ளது. ஒரு ஊட்டச்சத்து குறைவாக கிடைத்தால் கூட, அந்த குறைபாடு மிகவும் சிறிய அளவில் இருந்தால் கூட, அது நோயெதிர்ப்பு செயல்பாட்டினை வெகுவாக பாதிக்கும். அனைத்து நுண் ஊட்டச்சத்துக்களிலும் துத்தநாகம், செலினியம், இரும்புச்சத்து, தாமிரம், வைட்டமின் ஏ, சி, டி, இ, பி-12, பி-6, மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை ஒரு குழந்தையின் நோயெதிர்ப்பு திறனில் குறிப்பிடும்படியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான பங்காற்றுகின்றன.

நோய் ஏற்படுவது என்பது ஒரு குழந்தை வளரும் போது வழக்கமாக ஏற்படும் ஒரு விஷயமாக தோன்றலாம், ஆனால் அது அடிக்கடி நிகழ்கிறதா அதன் கடுமை எப்படி உள்ளது போன்றவற்றின் மீது கவனமாக இருப்பது முக்கியமாகும். நல்ல ஊட்டச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவியாக இருக்கிறது. மேலும் ஒரு வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம் அடிக்கடி நோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைப்பது மட்டுமல்ல அவை குழந்தையின் சரியான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் மிகவும் உதவிகரமாக உள்ளன.

சுகதாரம் மற்றும் ஊட்டச்சத்து கட்டுரைகள்