AddThis is disabled because of cookie consent

நோயெதிர்ப்புத் திறன் மற்றும் உங்களது குழந்தையின் வளர்ச்சி
நோயெதிர்ப்புத் திறன் மற்றும் உங்களது குழந்தையின் வளர்ச்சி

நோயெதிர்ப்புத் திறன் மற்றும் உங்களது குழந்தையின் வளர்ச்சி: சரியான ஊட்டச்சத்து தேவை

தங்களது குழந்தைகளுக்கு முழுமையான ஊட்டச்சதை உறுதி செய்வது என்பது அனைத்து தாய்மார்களுக்கும் உள்ள உலகளாவிய பிரச்சனை ஆகும். நீங்கள் ஒரு தாயாக ஆவது முதல், உங்களது குழந்தையின் ஒட்டுமொத்த நலனை உறுதி செய்தில்தான் உங்களது முதன்மையான கவனம் இருக்கும். உங்களது குழந்தையின் முறையான வளர்ச்சிக்கும், மற்றும் வெளி பாதிப்புகளுடன் போராடுவதற்குத் தேவையான நல்ல நோயெதிர்ப்புத் திறனை அவர்கள் பெறுவதற்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதுதான் உங்களது முக்கியமான கவலையாகும். 

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உள்ளடங்கிய நல்ல-சமச்சீரான மற்றும் ஊட்டச்சத்துமிக்க உணவை திட்டமிடுவது எளிதாகத் தெரிந்தாலும், நடைமுறையில் குழந்தைகள் எப்படியாவது ஊட்டச்சத்துமிக்க உணவுகளைத் தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக ‘சத்தற்ற’ உணவுகளை எந்த வகையிலாவது பெற்று விடுவார்கள்.

குழந்தைகளின் மிகச்சிறந்த ஆரோக்கியத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும், முறையான வளர்ச்சி என்பது வலிமைமிக்க நோயெதிர்ப்புத் திறனுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதை வல்லுநர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இவற்றுக்கிடையே உள்ள தொடர்பு நாம் கற்பனை செய்வதைக் காட்டிலும் பலமானதாக உள்ளது.

நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் உடல் வளர்ச்சி பாதிப்புகளுக்கும், அத்துடன் உடலியக்க மற்றும் அறிவாற்றல் திறன்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கும் மோசமான ஊட்டச்சத்துக்கும் பலமுள்ள தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் குழந்தைகள் தங்களது உடல் எடைக்கு ஏற்ப அதிக ஆற்றல்மிக்க வளர்சிதை மாற்றத்தையும் தொடர்ச்சியான நரம்பியல் வளர்ச்சியையும் எதிர்கொள்ள அவர்களுக்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள அவசியமாகிறது.

வளர்ச்சியடையும் காலம் (6-10 ஆண்டுகள்)

வளர்ச்சியடையும் காலம் (6-10 ஆண்டுகள்)

உங்களது குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலம் அவர்கள் பிறக்கும்போது ஆரம்ப நிலையில் உள்ளது. ஒரு பலம் மிக்க நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவதற்கு அவர்களது முதல் ஐந்து ஆண்டுகள் மிகவும் முக்கியமானதாகும், மேலும் இது குழந்தை 7 வயதை அடையும் வரை தொடர்கிறது. 7 வயதுக்குப் பிறகு, அது தனது உடலின் உட்புற மற்றும் வெளிப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள ஆரம்பிக்கிறது. 

ஒரு குழந்தை 10 வயதாகும்வரை அதன் முதல் ஒருசில வருடங்கள், ஒரு குழந்தையின் உடல், உணர்வு, அறிவு மற்றும் சமுதாயம் சார்ந்த வளர்ச்சி மிகவும் வேகமாக இருக்கிறது மேலும் ஊட்டச்சத்து எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் சுற்றுச்சூழல் மூலமாகவும் இதன் மீது ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியம். இந்த சமயத்தில் உட்கொள்ளப்படும் உணவின் தரம் அவர்களது வளர்ச்சி மற்றும் பிற்காலத்தில் அவர்களது நோயெதிர்ப்பு செயல்பாடு ஆகிய இரண்டின் மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் பெரும்பாலும் மோசமான நோயெதிர்ப்பு சக்தியைப் பெற்றிருப்பதாக விஞ்ஞான ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. குறைவான நோயெதிர்ப்புத் திறன் அல்லது நோயெதிர்ப்புத் திறன் குறைபாடு தொற்றுகள் மற்றும் நோய் ஏற்படுத்தும் கிருமிகளால் உங்களது குழந்தை அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் இவற்றின் காரணமாக உங்களது குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படலாம். இது குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை பாதிக்கும். 

நல்ல ஊட்டச்சத்து நல்ல நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும்

ஊட்டச்சத்து குறைபாடு உங்களது குழந்தையின் நோயெதிர்ப்புத் திறனை பெரிய அளவில் பாதிக்கும். கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற நுண்ஊட்டச்சத்துக்கள் உங்களது குழந்தையின் அன்றாட உணவில் ஒரு முக்கிய அம்சமாக இருக்க வேண்டும். அவை சிறிய அளவில் தேவைப்பட்டாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும், நோய்களை எதிர்ப்பதற்கும், சிறந்த நோயெதிர்ப்புத் திறனைப் பெறுவதற்கும் மற்றும் ஒட்டுமொத்த நலவாழ்வுக்கும் அவை மிகவும் அவசியமானவையாகும். துத்தநாகம், செலினியம், இரும்புச்சத்து, தாமிரம், வைட்டமின்கள் ஏ, சி, டி, இ மற்றும் பி-6, மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை நல்ல நோயெதிர்ப்புத் திறனை வளர்க்க உதவும் நுண் ஊட்டச்சத்துக்கள் ஆகும். இந்த நுண் ஊட்டச்சத்துக்கள் உங்களது குழந்தையின் நோயெதிர்ப்புத் திறன் மற்றும் வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, செலினியம் குழந்தைகளுக்கு மேம்பட்ட நோயெதிர்ப்புத் திறனுடன் தொடர்புடையதாகும். மேலும், பி-6 குறைபாடு குழந்தைகளில் வளர்ச்சி பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமையலாம். மற்ற பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகள் அயோடின் குறைபாடு, வைட்டமின் ஏ குறைபாடு, மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஆகியவையாகும்.

ஆரோக்கியமான உணவு பானங்கள்: நல்ல நோயெதிர்ப்பு சக்தி மற்றும் மிகச்சிறந்த வளர்ச்சிக்கு உதவக்கூடிய உங்களது மந்திரம்

உங்களது சிறந்த நோக்கங்கள் எப்படியிருந்தாலும், உங்களது குழந்தைக்கு நீங்கள் தற்சமயம் வழங்கும் உணவு முழுமையான ஊட்டச்சத்தை வழங்கத் தவறிவிடுகிறது. ஹார்லிக்ஸ் போன்ற ஆரோக்கிய உணவு பானங்கள் 23 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது, அது உங்களது குழந்தையின் முழுமையான வளர்ச்சியை அடைய உதவுகிறது. வளரும் குழந்தைகளில் ஆரோக்கியமான வளர்ச்சி என்பது ஐந்து அறிகுறிகள் மூலமாக வெளிப்படுகிறது, அதாவது அதிக தசைகள், அதிக எலும்புப் பரப்பளவு, ஆரோக்கியமான இரத்தம், மேம்பட்ட கவனம் செலுத்தும் திறன் மற்றும் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்பு.

ஹார்லிக்ஸில் உள்ள பிரத்யேகமான நுண் ஊட்டச்சத்துக் கலவை அவர்களது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த அவற்றுக்கு உதவக்கூடிய 7 நோயெதிர்ப்பு-ஊட்டச்சத்துக்களின்* 100% RDA-வைக் கொண்டுள்ளது. ஒரு வலிமையான நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கொண்ட ஒரு ஆரோக்கியமான உடல் உங்களது குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு மட்டும் உதவுவதில்லை மாறாக அதன் தன்னம்பிக்கை மற்றும் அறிவாற்றலையும் அதிகரிக்கிறது, இது அனைத்து தாய்மார்களும் விரும்பும் ஒரு அம்சமாகும்.

சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து கட்டுரைகள்