AddThis is disabled because of cookie consent

ஒரு குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை பாதிக்கக்கூடிய காரணிகள்
ஒரு குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை பாதிக்கக்கூடிய காரணிகள்

ஒரு குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை பாதிக்கக்கூடிய காரணிகள்

உங்களது குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதன் உடல் மற்றும் மனம் சந்திக்கும் அனைத்துவிதமான மாற்றங்களும் உள்ளடங்கும். ஒரு பெற்றோர் என்ற முறையில், இந்த மாற்றங்களை முடிவு செய்யும் காரணிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியமாகும்.

உடல் வளர்ச்சி

உங்களது குழந்தையின் உடல் வளர்ச்சியில் உயரம், உடல் எடை, தசைகள் மற்றும் எலும்புகள் வளர்ச்சியடைதல் ஆகியவை அடங்கும். பின்வரும் காரணிகள் ஒரு குழந்தையின் உடல் வளர்ச்சியை பாதிக்கும்:

மரபியல்1

உங்களது குழந்தை உங்களது உடல் குணாதிசயங்கள் அதன் மரபணுக்கள் மூலமாக பெறுகிறது. உங்களது குழந்தை உயரம் சம்மந்தமான ஒரு ஆதிக்கம் நிறைந்த மரபணுவைப் பெற்றிருந்தால், அதுவும் உங்களைப் போன்ற உயரமாக வளரும். எனினும், மரபியல் முறையில் இதய நோய்கள், நீரிழிவு, உடற்பருமன் போன்ற பல்வேறு பாதிப்புகளும் சுகாதார பிரச்சனைகளும் அடுத்த சந்ததிக்குச் செல்கிறது. இந்த பிரச்சனைகள் உங்களது குழந்தையின் உடல் எடை, தசை மற்றும் எலும்பு வளர்ச்சி போன்றவற்றை பாதிக்கலாம்.2

ஊட்டச்சத்து

உங்களது குழந்தையின் முழுமையான உடல் வளர்ச்சிக்கு அதன் உடலுக்கு சரியான அளவில் மாவுச்சத்து, புரதங்கள், வைட்டமின்கள், மற்றும் கனிமங்கள் ஆகியவை தேவைப்படுகிறது. உதாரணமாக, எலும்புகள் வளர்ச்சிக்கு சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் இ நோயெதிர்ப்பு சக்தியின் வளர்ச்சிக்கும், நோயெதிர்ப்புக்கு இரும்புச்சத்தும், உடல் வலிமையைப் பெருக்குவதற்கு புரதமும் மேலும் வெளிச்சமற்ற இடத்தில் நன்றாக பார்வை தெரிவதற்கு வைட்டமின் ஏ-யும் அவசியமானவையாகும். முறையான ஊட்டச்சத்து சரியாக வழங்கப்படவில்லை என்றால் உங்களது குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

சுற்றுச்சூழல்4

நிலம், தண்ணீர் அல்லது உணவின் வாயிலாக ஈயம், மாங்கனீஸ், பாதரசம், ஆர்சனிக் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றின் பாதிப்புக்கு நீண்டகாலமாக ஆட்படுவது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிப்பதாகவும், உடல் குறைபாடுகளை ஏற்படுத்துவதாகவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலகீனப்படுத்துவதாகவும் மேலும் செயல்திறன்களை பாதிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மன மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி

மன மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி

உங்களது குழந்தையின் மன மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் அதன் மூளை, நரம்பியல் செயல்முறைகள், சிந்தனைத் திறன்கள், கற்கும் ஆற்றல்கள் போன்றவற்றின் வளர்ச்சியும் உள்ளடங்கும்.5 ஒரு குழந்தையின் மன மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை பின்வரும் காரணிகள் பாதிக்கின்றன:

ஊட்டச்சத்து6

உங்களது குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால், அது அக்குழந்தையின் மன வளர்ச்சியை மோசமாக பாதிக்கும். உதாரணமாக, அயோடின், இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடுகள் மனவளர்ச்சிக் குறைபாடுகளை ஏற்படுத்துவதோடு மிகவும் அரிதான சூழ்நிலைகளில் நரம்புமண்டலத்தில் சேதத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. ஹார்லிக்ஸ் போன்ற ஊட்டச்சத்து பானங்கள் குழந்தையின் ஊட்டச்சத்துத் தேவைகள் மற்றும் அவை உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்கு இடையில் உள்ள இடைவெளியை சமன்படுத்துகிறது.

சுற்றுச்சூழல்7

குழந்தைகளில் முக்கியமாக 6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஈயம், மாங்கனீஸ், ஆர்சனிக் ஆகியவற்றின் விஷத்தன்மை அறிவாற்றல் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது. பாதரசத்தின் விஷத்தன்மை மொழித் திறன்கள், கவனம் செலுத்துதல் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். 

உணர்வு சார்ந்த மற்றும் சமுதாய வளர்ச்சி8

ஒரு குழந்தையின் உணர்வு சார்ந்த வளர்ச்சியில் தனது உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல், வெளிப்படுத்துதல் மற்றும் கட்டுக்குள் வைத்தல் ஆகியவை அடங்கும், அதேவேளை சமுதாய வளர்ச்சியில் மற்ற மக்களுடன் அதன் நடத்தையும் உள்ளடங்கும். பின்வரும் காரணிகள் ஒரு குழந்தையின் உணர்வு சார்ந்த மற்றும் சமுதாய வளர்ச்சியை பாதிக்கின்றன:

பெற்றோரின் குழந்தை வளர்ப்பு முறை மற்றும் கலாச்சாரம்

கத்துதல், கடுமையாக தண்டித்தல், அவமானப்படுத்தல் போன்ற கடுமையான பெற்றோரின் குழந்தை வளர்ப்பு முறைகள் – அக்குழந்தையை மிகவும் மாறுபட்டவர்களாக அல்லது உணர்ச்சி வசப்படுபவர்களாக மாற்றுகிறது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, குழந்தையுடன் ஒரு அன்பான, பாசமான, நம்பிக்கையான உறவினை வளர்த்துக்கொள்வது உங்களது குழந்தையை ஒரு உணர்வு ரீதியாக முதிர்ச்சி நிறைந்த நபராக உருவாக்க உதவுகிறது.

கலாச்சார வழக்கங்கள்தான் ஒரு குழந்தையின் சமுதாய உறவுகளைத் தீர்மானிக்கின்றன. உதாரணமாக, பெரும்பாலான கலாச்சாரங்களில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் கோபமாக நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ளப்படுகிறது, அதனால் ஒருசில கலாச்சார அமைப்புகளில் வளர்வதும் ஒரு சிறுவனை அதிக கோபக்காரனாக மாற்றுகிறது.

மேற்கூறிய காரணிகள் உங்களது குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது, அதேவேளை உங்களது குழந்தையை வழிநடத்துவதில் நீங்கள் ஒரு முக்கிய பங்காற்ற முடியும். அதனால், அதன் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நீங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

குழந்தையின் வளர்ச்சி, குழந்தையின் மேம்பாடு

சுகதாரம் மற்றும் ஊட்டச்சத்து கட்டுரைகள்