AddThis is disabled because of cookie consent

பெற்றோர் எவ்வாறு தங்களது குழந்தையின் உணவுப் பழக்கத்தில் நல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்?
பெற்றோர் எவ்வாறு தங்களது குழந்தையின் உணவுப் பழக்கத்தில் நல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்?

பெற்றோர் எவ்வாறு தங்களது குழந்தையின் உணவுப் பழக்கத்தில் நல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்?

Eating

தங்களது குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. கருவுற்றது முதல், குழந்தைக்கு எந்த மாதிரியான உணவில் நாட்டம் ஏற்படும் என்பதை தாய் நிர்ணயிக்க முடியும். அவர்கள் வளரும்போது, அவர்களின் விருப்பு வெறுப்புகளை மனதில் கொண்டு முக்கியமான ஊட்டச்சத்துக்களை எவ்வாறு அவர்களது உணவில் சேர்ப்பது என்பதை உறுதி செய்வது பெற்றோரின் முக்கிய பணியாகும். அவர்கள் சாப்பிடும் நேரம் கூட பெற்றோர்கள் எந்த நேத்தில் எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதை அதிகம் சார்ந்துள்ளது. வழக்கமான உணவு மற்றும் சிற்றுண்டிகளை சாப்பிடுதல், ஒன்றாக உட்கார்ந்து இரவு உணவு சாப்பிடுதல் போன்றவை நல்ல சாப்பிடும் பழக்கங்களை குழந்தைகளுக்கு உருவாக்கும். அன்றாடம் அவர்களுக்கு பால் கொடுப்பது அவர்களது வயிறு நிறைந்துள்ளது போன்ற உணர்வை தருவதுடன் மிகவும் முக்கியமான வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்களை வழங்குகிறது. அதனால், குழந்தையின் சாப்பிடும் பழக்கத்தில் பெற்றோர் அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றால், அதனை அவர்கள் எவ்வாறு சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? ஒரு குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை உருவாக்கும் முறையை நாம் பார்க்கலாம்:1

ஒரு ஆரோக்கியமான முறையில் வளர்ச்சி மற்றும் உடல் எடையையும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களையும் வளர்த்தல்2

குழந்தைப்பருவ உடற்பருமன் ஒரு கவலை தரக்கூடிய வளர்ந்து வரும் பிரச்சனையாகும். இதில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தையின் உடல் எடை அதிகமாக இருப்பதை மறுக்கும் நிலையில் இருக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் குழந்தையின் எடைக்கு குழந்தையின் கொழுப்புதான் காரணம் என்று கருதுகின்றனர் மேலும் தங்களது குழந்தையின் எதிர்கால வாழ்வில் அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்பினை புறக்கணிக்கின்றனர். குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உடல் எடை அதிகரித்தலை நிர்வகிப்பதில் அந்த குழந்தையின் பெற்றோருக்கு 2ஆம் வகை நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற குழந்தைப்பருவ உடற்பருமன் சம்மந்தமான சுகாதாரப் – பிரச்சனைகளைப் பற்றியும், தங்களது குழந்தைகள் வளர்ந்து வயதுவந்தோராக ஆகும்போதும் அதே உடற்பருமன் ஏற்படுத்தும் பாதிப்பையும் பற்றிய புரிதல் ஏற்படுவது முதல் நிலையாகும். ஆகையால், ஆரோக்கியமான உணவுமுறையை ஊக்குவிப்பது மற்றும் அவர்களது உணவில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட உணவு சார்ந்த ஊட்டச்சத்து சமநிலையைப் (RDA) பற்றி அவர்கள் புரிந்துகொள்வதும் தான் இப்போது மிகவும் முக்கியமான விஷயங்களாக இருக்கின்றன. 

இளம் குழந்தைகளிடையே தங்களது உடலைப் பற்றிய நல்ல எண்ணத்தை ஏற்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமான சாப்பிடும் முறையை அறிமுகப்படுத்தும் ஆரம்பநிலைக் குழந்தைப்பருவ திட்டம்3

ஆரோக்கியமான சாப்பிடும் முறைகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில் பெற்றோர் முன்னுதாரணங்களாக இருப்பது ஒரு சிறந்த முறையாகும். ஆனால் பெற்றோர் உணவளிக்கும் முறை என்பது ஒரு தெளிவற்ற விஷயமாகும். பெற்றோர் பொதுவாக குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்பதற்காக அவர்களே உணவளிக்கும் முறையை நம்புகின்றனர். இதன் காரணமாக ஊட்டச்சத்து மற்றும் பரிமாறும் அளவின் கட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பே குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிட்டுவிடுகிறார்கள். மேலும், உடலைப் பற்றி குழந்தைக்கு உள்ள தன்னம்பிக்கை என்பதில் ஒரு குழந்தை உடல்ரீதியாக பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது (வடிவம் மற்றும் எடை) ஆகியவை மட்டுமல்ல, ஆனால் அவர்களது  உணர்வு சார்ந்த ஆரோக்கியமும் அதில் அடங்கும். அதற்கும் உடல் ஆரோக்கியத்தைப் போலவே அதிக கவனம் தேவைப்படுகிறது. 

குழந்தைகளிடையே ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை வளர்த்தல் மற்றும் சாப்பிடுவதில் உள்ள மனஅழுத்தத்தை அகற்றுதல்4

பெற்றோர் உரிய கவனம் செலுத்தினால், ஆரோக்கியம்-சம்மந்தமான நடத்தையை கவலையான மனநிலையுடன் பார்க்காமல் அதனை மாற்றுவதற்குத் மிகவும் உற்சாகத்துடன் தேவையான மாற்றங்களைச் செய்வது என்பது அவர்களுக்கு எட்டும் தூரத்தில்தான் இருக்கிறது.  பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தேர்வுகள், கல்வி மற்றும் சக நண்பர்களின் அழுத்தம் ஆகியவற்றால் மட்டும் மன அழுத்தத்திற்கு ஆட்படுவதில்லை, மாறாக மற்றவர்கள் அவர்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதன் அடிப்படையிலும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். உங்களது குழந்தையுடன் பேசுவது ஒரு ஆக்கப்பூர்வமான தகவல் பரிமாற்றத்தையும், மகிழ்ச்சி மற்றும் திருப்தியையும் ஏற்படுத்தும் அதன் விளைவாக அவர்களால் மேம்பட்ட ஆரோக்கியமான வாழ்க்கைத் தேர்வுகளை மேற்கொள்ள முடியும்.

ஆரோக்கியமான சாப்பிடும் முறை வீட்டில் இருந்துதான் துவங்குகிறது. குழந்தைகள் எதைப் பார்க்கிறார்களோ அதே பழக்கத்தைத்தான் அவர்களும் பின்பற்றுவார்கள். அதனால் பெற்றோர்களாக நீங்கள் ஊட்டச்சத்து பற்றி சிறப்பான தகவல்களைப் பெற்று திறன் படைத்தவர்களாக மாற வேண்டும் மேலும் அதைப் பற்றி உங்களது குழந்தைகளிடம் பேச வேண்டும். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

ஆரோக்கியமான சாப்பிடும் முறை, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து

சுகதாரம் மற்றும் ஊட்டச்சத்து கட்டுரைகள்