AddThis is disabled because of cookie consent

இதனால்தான் உங்களது குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவது முக்கியமாகும்
இதனால்தான் உங்களது குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவது முக்கியமாகும்

இதனால்தான் உங்களது குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவது முக்கியமாகும்

ஒரு வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம் ஒரு குழந்தைக்கு நோய்களுக்கு எதிரான சக்திமிக்க இயற்கையான எதிர்ப்புத் திறனை வழங்குகிறது. மாறாக, ஒரு பலகீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கொண்ட குழந்தைக்கு சளி, காய்ச்சல் மற்றும் இன்னும் மோசமான நோய்களால் எளிதாக பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளது.

நோயெதிர்ப்பு மண்டலத்தின் பங்கு

வைரஸ்கள், பாக்டீரியா, பூஞ்சைகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்றவற்றுக்கு எதிராக போராடுவதோடு மட்டுமல்லாமல், நோயெதிர்ப்பு மண்டலம் திசுக்களை சரிசெய்தல், காயங்களை ஆற்றுதல், இறந்த மற்றும் புற்று செல்களை அகற்றுதல் போன்றவற்றிலும் உடலுக்கு உதவி செய்கிறது.1 நோயெதிர்ப்பு மண்டலம் செய்யும் மற்றுமொரு முக்கிய பணி உடலில் உள்ள ஈரம்பதம் உள்ள மேற்பரப்புகள் வழியாக உடலுக்குள் நுழைகின்ற விஷத்தன்மை கொண்ட மற்றும் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருட்களையும் அகற்றுவதற்கு அது உதவி செய்கிறது.2

உணவு மற்றும் சுற்றுச்சூழல் காரணமாக நோயெதிர்ப்பு மண்டலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது

ஊட்டச்சத்துக்களின் வளர்சிதை மாற்றம் ஹார்மோன் சமிக்ஞைகள் மூலமாக நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கின்றன. நோயெதிர்ப்பு செல்கள் கூட ஊட்டச்சத்து மாற்றங்களை நேரடியாக உணர்ந்து அதற்கேற்ப எதிர்வினை புரிகின்றன.3

உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் முறையான செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான அமினோ அமிலங்கள், அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6, பி12, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ, துத்தநாகம், தாமிரம், இரும்புச்சத்து மற்றும் செலினியம் போன்றவை உட்பட்ட ஊட்டச்சத்துக்கள் அவசியமானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் ஒரு அல்லது அதற்கு அதிகமான ஊட்டச்சத்து குறைபாடு ஒட்டுமொத்த நோயெதிர்ப்புத் திறனை பாதிக்கும்.4

தங்களது சுற்றுச்சூழலுடன் மனிதர்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் அவர்களது உடலில் எத்தகைய நுண்ணுயிரிகள் இருக்கின்றன என்பதை முடிவு செய்கிறது. அத்தகைய செயல்பாடுகளில் மற்ற மனிதர்களோடு அவர்கள் செய்யும் உடல் சார்ந்த செயல்களாகவோ, வெளிப்புற சூழ்நிலைகளுடன் அவர்கள் மேற்கொள்ளும் பணியோ அல்லது உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளுதல் போன்ற இவற்றில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த செயல்பாடுகள் அனைத்தும் ஒவ்வொரு மனிதனிலும் ஒரு பிரத்யேகமான உயிரியல் சூழல் உருவாவதற்கு காரணமாக அமைகிறது.5 அந்த உயிரியல் சூழல் மனிதனின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் உருவாக்கம், பயிற்சி மற்றும் செயல்பாட்டில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.6

குழந்தைகள் ஒரு மேம்பட்ட நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பெற எப்படி உதவி செய்வது

குழந்தைகள் ஒரு மேம்பட்ட நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பெற எப்படி உதவி செய்வது

குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலம் இன்னும் வளர்ச்சி நிலையில்தான் இருக்கும் மேலும் ஒருசில செயல்பாடுகளைச் செய்வதன் மூலமாக அவர்கள் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பினைப் பெறுவதை உறுதி செய்து அவர்களது நோயெதிர்ப்பு மண்டலம் பலப்படுவதை நாம் உறுதி செய்யலாம்.

அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சமச்சீரான உணவை வழங்குதல்

நோயெதிர்ப்புத் திறனில் ஊட்டச்சத்துக்கள் ஒரு மிக முக்கியமாக பங்காற்றுகின்றன மேலும் உலகெங்கிலும் நோயெதிர்ப்பு-குறைபாட்டுக்கு ஊட்டச்சத்து குறைபாடுதான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. வைட்டமின்கள், அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் போன்ற அனைத்து தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்ட ஒரு முறையான சமச்சீரான உணவு நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பராமரிப்பதற்கு மிகவும் முக்கியமானதாகும்.7

சரியான நேரத்தில் அவர்களைத் தூங்க வைத்தல்

தூக்கம் என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை முறைப்படுத்தும் முக்கியமான செயலைச் செய்யக்கூடிய ஒரு சீரமைக்கும் செயல்முறையாகும். சரியான தூக்கம் இல்லாமை நோயெதிர்ப்பு மண்டலத்தை பலகீனப்படுத்தும் அத்துடன் நோய்களுக்கு ஆளாகும் வாய்ப்பையும் அதிகரிக்கும் ஆகையால் குழந்தைகள் நன்றாக ஓய்வெடுப்பதையும் சரியாக தூங்குவதையும் உறுதி செய்வது முக்கியமாகும்.8

பாதுகாப்பான முறையில் சூரிய ஒளியைப் பெறுவதை ஊக்குவித்தல்

வைட்டமின் டி உடலில் உள்ள நோயெதிர்ப்பு திறனையும் மற்ற வளங்களின் மூலமாக பெற்ற நோயெதிர்ப்புத் திறனையும் மேம்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிகம் தொற்றுக்கு ஆளாவதற்கும் வைட்டமின் டி குறைபாட்டிற்கு நேரடித் தொடர்புள்ளது.9 ஆகையால், அதிகமாக வெளியிலில் ஆடாமல் சிறிது நேரம் வெயிலில் விளையாடுவதற்கு குழந்தைகளை ஊக்கப்படுத்துவது அவர்களது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானதாகும் ஏனெனில் அது இயற்கையாகவே வைட்டமின் டி உற்பத்தியாக உதவி செய்கிறது. 

ஆதரவான நுண்ணுயிரிகளை சேர்த்துக்கொள்ளுதல்

அழிக்கும் திறன் படைத்த செல்கள் உள்ளிட்ட நோயெதிர்ப்பு மண்டலத்தின் சில அம்சங்களை ஆதரவான பாக்டீரியாவின் உதவியால் மேம்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.10 ஆகையால், அவற்றை குழந்தைகளின் உணவில் சேர்த்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

ஆகையால், உங்களது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்வதற்கு இந்த கருத்துக்களை உங்களது மனதில் கொள்வதை உறுதி செய்யுங்கள். உணவுப் பழக்கத்தை கண்காணிப்பதன் மூலமாகவும், வெளியில் சென்று செய்யும் செயல்களை ஊக்குவித்து முறையான ஓய்வினை வழங்குவதன் மூலமாகவும் குழந்தையின் நோயெதிர்ப்பித் திறனை பலப்படுத்தி அதனைப் பராமரிக்க நீங்கள் உதவ முடியும்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

 

சமச்சீரான ஊட்டச்சத்து உணவு, குழந்தையின் நோயெதிர்ப்புத்திறன்

சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து கட்டுரைகள்