AddThis is disabled because of cookie consent

குழந்தைகளிடம் காணப்படும் வைட்டமின் குறைபாட்டின் 5 அறிகுறிகள்
குழந்தைகளிடம் காணப்படும் வைட்டமின் குறைபாட்டின் 5 அறிகுறிகள்

குழந்தைகளிடம் காணப்படும் வைட்டமின் குறைபாட்டின் 5 அறிகுறிகள்

குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வைட்டமின்கள் மிகவும் அவசியமானவை என்பதில் ஒருவருக்கும் சந்தேகம் இருக்கப் போவதில்லை – அவைதான் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். வைட்டமின்களை இரண்டு முக்கிய பிரிவுகளாக நாம் பிரிப்பது சிறப்பாக இருக்கும் – கொழுப்பில் கரையக்கூடியவை மற்றும் தண்ணீரில் கரையக்கூடியவை. ஏ, டி, இ, மற்றும் கே வைட்டமின்கள் கொழுப்பில் கரைபவையாகும், அதாவது அவை உடலில் நீண்ட காலத்திற்கு பாதுகாக்கப்பட்டிருக்கும் 1. ஆனால் அவ்வாறு இல்லாமல், பி மற்றும் சி போன்ற தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் அவை உடலுக்குள் உறிஞ்சப்படுவதற்கு முன்னால் தண்ணீரில் கரைய வேண்டும் 2. பல்வேறு வகையான உணவுகள் பல்வேறு வகையான வைட்டமின்களைத் தருவதால், உங்களது குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அனைத்தும் நிறைந்த சமச்சீரான உணவை வழங்குவது அவசியமாகும்.

 

குழந்தைகளில் காணப்படும் 5 பொதுவான வைட்டமின் குறைபாட்டு அறிகுறிகள் இதோ:

1. வைட்டமின் ஏ3

இதன் குறைபாட்டினால் ஏற்படக்கூடிய ஆரம்பக்கட்ட பிரச்சனை கண்வறட்சி (அல்லது “உலர்வான கண்”), இதில் மாலைக் கண் பாதிப்பு மற்றும் கருவிழி/ வெண்படலம் உலர்தல், பிட்டோட் திட்டுக்கள் மற்றும் கருவிழிப் புண்.

வைட்டமின் ஏ குறைபாடு இரைப்பை மற்றும் தொண்டை, மார்பக தொற்றுகளையும் ஏற்படும் அதிக அபாயத்தை ஏற்படுத்தும். 4 குழந்தைகளில் தாமதமான வளர்ச்சி மற்றும் எலும்பு மேம்பாடு ஆகியவையும் வைட்டமின் ஏ குறைபாட்டின் அறிகுறிகளாகும். இதை எதிர்கொள்வதற்கு, குழந்தைக்கு ஈரல், பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிகள், பால் மற்றும் முட்டை ஆகியவற்றைக் கொடுங்கள். மிதமான அளவு வைட்டமின் ஏ குறைபாட்டினை எந்தவிதமான நீண்டகால பாதிப்புகளும் இல்லாமல் சரிசெய்ய முடியும்.

2. வைட்டமின் பி125

குழந்தைகளிடம் காணப்படும் வைட்டமின் பி12 குறைபாடு பசியின்மை, வளர்ச்சியில் தாமதம் ஏற்படுதல், நரம்புசார்ந்த பிரச்சனைகள், எரிச்சலடைதல் மற்றும் பலகீனம் போன்ற அறிகுறிகள் மூலமாக வெளிப்படும். முழு தானியங்கள், கொட்டைகள், மீன் மற்றும் கோழி இறைச்சி ஆகிய உணவு வகைகளை உங்களது குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்வது எந்த ஒரு குறைபாட்டினையும் அண்டவிடாமல் செய்யும். சரியான நேரத்தில் இந்த குறைபாட்டினைக் கண்டறிவது, சரிசெய்ய முடியாத பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன் உங்களது குழந்தையின் உடல் வளர்ச்சியையும் மேம்படுத்தும்.

3. வைட்டமின் சி6

வைட்டமின் சி குறைபாட்டின் காரணமாக சொறி சிரங்கு ஏற்படலாம் அதுவே பல்வேறு பாதிப்புகளாக உருவெடுக்களாம் – எளிதாக புண் ஏற்படுதல், வீக்கமுடன் இரத்தக்கசிவு ஏற்படக்கூடிய ஈறுகள், காயங்கள் மெதுவாக ஆறுதல், மேலும் உலர்வான தலைமுடி ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். மேற்கூறிய ஏதாவது அறிகுறிகள் உங்களது குழந்தைகளுக்கு ஏற்பட்டிருந்தால், உங்களது குழந்தைக்கு கொய்யா, மஞ்சள் குடைமிளகாய், கிவி மற்றும் ப்ரோக்கோலி போன்ற வைட்மின்  சி நிறைவாக உள்ள இரண்டு முதல் மூன்று உணவுகளை அன்றாடம் கொடுங்கள். 

4. வைட்டமின் டி7

குழந்தைகள் வளர்ந்து வரும் சமயத்தில் அவர்களுக்கு ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் தசைகள் உருவாவதற்கு போதுமான அளவு வைட்டமின் டி தேவைப்படுகிறது. வைட்டமின் டி அறிகுறிகள் எப்போதும் வெளிப்படையாக தெரிவதில்லை. வைட்டமின் டி குறைபாடு உங்களது குழந்தைக்கு தசைப்பிடிப்புகள், பொதுவான தசை பலகீனம் மற்றும் எலும்பு முறிவுகள் ஆகியவை ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். பல் பிரச்சனைகள் குழந்தைகளிடம் காணப்படும் மற்றுமொரு வைட்டமின் டி குறைபாட்டு அறிகுறியாகும். மீன், முட்டையின் மஞ்சள் கரு, மற்றும் தானியப் உணவுப்பொருட்கள் ஆகியவற்றில் வைட்டமின் டி அதிகம் காணப்படுகிறது. 

5. வைட்டமின் இ8

வைட்டமின் இ குறைபாடு மிகவும் பொதுவாக காணப்படும் பிரச்சனையில்லை. இது ஊட்டச்சத்து குறைபாட்டின் விளைவாகும் மேலும் மோசமான நரம்பு ஆரோக்கியத்தின் காரணமாக நரம்புப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது போன்ற குறைபாட்டின் காரணமாக பிறக்கும்போது குழந்தையின் உடல் எடை குறைவாக இருக்கும். பொதுவான அறிகுறிகளில் தசை பலகீனம், பார்வைப் பிரச்சனைகள், உணர்வின்மை, நடப்பது கஷ்டமாக இருத்தல் மற்றும் நடுக்கம் போன்றவை உள்ளடங்கும். பாதாம், அவகாடோ, கீரை மற்றும் சர்க்கரைவல்லிக் கிழங்கு போன்றவை வைட்டமின் இ அதிகம் உள்ள உணவுப் பொருட்களாகும்.

ஆகையால் உங்களது குழந்தையின் ஆரோக்கியத்தை கண்காணித்து வெளியே விளையாடுதல் மற்றும் உடற்பயிற்சி செய்தல் போன்ற உடல் உழைப்புள்ள செயல்களைச் செய்வதன் மூலமாகவும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் மூலமாகவும் குழந்தையின் ஆரோக்கியத்தை படிப்படியாக மேம்படுத்துவது மிகவும் முக்கியமாகும். உங்களது குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றம் நல-வாழ்வினை மேம்படுத்துவதற்கு உங்களது குழந்தை நன்றாக தூங்குவதையும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவதையும் உறுதி செய்யுங்கள்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

குழந்தைகளிடையே காணப்படும் வைட்டமின் குறைபாடு, வைட்டமின் குறைபாட்டின் அறிகுறிகள்

சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து கட்டுரைகள்