AddThis is disabled because of cookie consent

10-ல் 9 பேருக்கு நுண்ணூட்டச்சத்துக் குறைபாடு உள்ளது
10-ல் 9 பேருக்கு நுண்ணூட்டச்சத்துக் குறைபாடு உள்ளது

9-in-10-deficiency-study

எனது குழந்தை அபாயத்தில் உள்ளதா?

மறைந்துள்ள பசி பெரும்பாலும் தெரிவதில்லை

உங்களது குழந்தை ஆரோக்கியமாக தெரியலாம் ஆனால் அதன் மீது ஏற்படும் சுகாதார மற்றும் நலவாழ்வின் எதிர்மறை தாக்கங்களால் பாதிக்கப்படலாம். உதாரணமாக, அவர்களின் வளர்ச்சி குன்றியோ, இரவு நேரப் பார்வை குறைபாடுடனோ இருக்கலாம் அல்லது அடிக்கடி நோய் பாதிப்பினால் கஷ்டப்படலாம்.

ஊட்டச்சத்து உணவு மதிப்பீட்டுக் கருவியைப் பயன்படுத்துங்கள்

பசியின்மை, சோம்பல், மற்றும் மூச்சடைப்பு போன்ற பெரும்பாலும் இரும்புச் சத்து குறைபாட்டினால் ஏற்படக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகளாகும். உங்களது குழந்தை அதற்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுகிறாதா என்பதை மதிப்பிடுவதற்கு ஊட்டச்சத்து மீட்டர் ஆன்லைன் உணவு பரிசோதனையை பயன்படுத்துங்கள். அது நீங்கள் உள்ளீடு செய்யும் உணவினை மதிப்பீடு செய்து நுண்ணூட்டச்சத்துக்களின் தேவையையும் எடுத்துக்கொள்ளும் அளவில் உள்ள இடைவெளியையும் தெரிவிக்கும். நீங்கள் உங்களது குழந்தையின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை கூர்ந்த கவனிக்க ஊட்டச்சத்து மீட்டரைப் பயன்படுத்தி அவர்களது உணவினை அதற்கேற்ப மாற்றலாம்.

 

 எனது குழந்தை அபாயத்தில் உள்ளதா
 எனது குழந்தை அபாயத்தில் உள்ளதா

நான் என்ன செய்ய முடியும்?

நுண்ணூட்டச்சத்துக்களின் சக்தி

நீங்கள் உங்களது குழந்தை எடுத்துக்கொள்ளும் நுண்ணூட்டச்சத்தின் அளவின் அடிப்படையில் மறைந்துள்ள பசியின் அபாயத்தைக் குறைக்க நீங்கள் உதவலாம். நுண்ணூட்டச்சத்துக்கள் யாவும் நல்ல ஆரோக்கியம், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அவசியம் தேவைப்படக்கூடிய அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் கனிமங்களாகும். இவை சிறிய அளவில் தேவைப்பட்டாலும், இவை குழந்தைகளுக்கான நல்ல ஊட்டச்சத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குத் தேவையான நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் இதர பொருட்களை உடல் உற்பத்தி செய்வதற்கு நுண்ணூட்டச்சத்துக்கள் அனுமதிக்கின்றன.

நுண்ணூட்டச்சத்துக்கள் போதுமான அளவில் எடுக்கப்படவில்லை என்றால் அது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். மிகவும் தீவிரமான சூழ்நிலைகளில், நுண்ணூட்டச்சத்து குறைபாடு வளர்ச்சித் தடை, மன வளர்ச்சி குறைபாடு ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன் வலிமை மிக்க நோயெதிர்ப்பு மண்டலங்களின் வளர்ச்சியை பாதிக்கும். இது இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படக்கூடிய இரத்தசோகை ஏற்படும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம்.

இன்னும் படியுங்கள்

நான் என்ன செய்ய முடியும்?
நான் என்ன செய்ய முடியும்?