எனது குழந்தை அபாயத்தில் உள்ளதா?

 

நுண்ணூட்டச்சத்துக்களின் சக்தி

நீங்கள் உங்களது குழந்தை எடுத்துக்கொள்ளும் நுண்ணூட்டச்சத்தின் அளவின் அடிப்படையில் மறைந்துள்ள பசியின் அபாயத்தைக் குறைக்க நீங்கள் உதவலாம். நுண்ணூட்டச்சத்துக்கள் யாவும் நல்ல ஆரோக்கியம், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அவசியம் தேவைப்படக்கூடிய அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் கனிமங்களாகும். இவை சிறிய அளவில் தேவைப்பட்டாலும், இவை குழந்தைகளுக்கான நல்ல ஊட்டச்சத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குத் தேவையான நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் இதர பொருட்களை உடல் உற்பத்தி செய்வதற்கு நுண்ணூட்டச்சத்துக்கள் அனுமதிக்கின்றன.

நுண்ணூட்டச்சத்துக்கள் போதுமான அளவில் எடுக்கப்படவில்லை என்றால் அது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். மிகவும் தீவிரமான சூழ்நிலைகளில், நுண்ணூட்டச்சத்து குறைபாடு வளர்ச்சித் தடை, மன வளர்ச்சி குறைபாடு ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன் வலிமை மிக்க நோயெதிர்ப்பு மண்டலங்களின் வளர்ச்சியை பாதிக்கும். இது இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படக்கூடிய இரத்தசோகை ஏற்படும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம்.

உங்களது குழந்தையின் உணவினை பல்வகைப்படுத்துதல்

நுண்ணூட்டச்சத்துக் குறைபாடுகளை நிர்வகிப்பதற்கான ஒரு எளிமையான வழி வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த பால் பொருட்கள், இறைச்சி, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற பல்வகையான உணவுப்பொருட்களை சாப்பிட ஊக்கப்படுத்துவதாகும்.

அன்றாடம் இரண்டு கோப்பை ஹார்லிக்ஸ்

நீங்கள் அன்றாடம் உங்களது குழந்தைக்கு இரண்டு கோப்பை ஹார்லிக்சும் கொடுக்கலாம். ஹார்லிக்ஸ் முக்கியமான நுண்ணூட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது மேலும் குழந்தைகளின் அன்றாட உணவில் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டால் அவர்கள் உயரமாகவும், புத்தி கூர்மையுடனும், பலமாகவும் வளர்வதற்கு உதவுவதாக மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து உணவு மதிப்பீட்டுக் கருவியைப் பயன்படுத்துங்கள்

ஹார்லிக்ஸ் ஊட்டச்சத்து மீட்டர் ஆன்லைன் உணவு பரிசோதனையை தொடர்ந்து பயன்படுத்துவதும் உங்களது குழந்தையின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளைக் கண்காணிக்க உதவும் மேலும் உங்களது கொள்முதல் முடிவுகளை அதற்கேற்ப உங்களுக்கு தெரிவிக்கும். அது நீங்கள் உள்ளீடு செய்யும் உணவினை மதிப்பீடு செய்து நுண்ணூட்டச்சத்துக்களின் தேவையையும் எடுத்துக்கொள்ளும் அளவில் உள்ள இடைவெளியையும் தெரிவிக்கும்.

நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் அவற்றின் செயல்பாடு

சுண்ணாம்புச்சத்து

வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாவதற்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும், அத்துடன் நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகளுக்கும் முக்கியமானதாகும். இரத்தம் உறைவதிலும் உதவி செய்கிறது.

வைட்டமின் ஏ

நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, மேலும் சருமம் மற்றும் உடல் லைனிங் (எ.கா. நுரையீரல்) போன்றவற்றின் வழக்கமான அமைப்பு மற்றும் செயல்பாட்டிற்கு முக்கியமானதாகும். மங்கலான வெளிச்சத்தில் பார்க்க உதவுகிறது.

ஃபோலிக் அமிலம்/ஃபோலேட்

ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக தேவைப்படுகிறது.

வைட்டமின் பி12

உணவில் இருந்து சக்தியை வெளிப்படுத்த உதவுகிறது. நரம்பு மண்டலத்தின் பி12ஐ ஆரோக்கியமாக வைத்திருக்கிறது மேலும் உடல் முழுவதும் பிராணவாயுவை எடுத்துச்செல்ல அவசியமான சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க முக்கியமானதாகும்.

இரும்புச்சத்து

சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க தேவைப்படுகிறது. வழக்கமான வளர்சிதை மாற்றத்திற்கும் நொதிகளின் செயல்பாடுகளையும் உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை அகற்றவும் தேவைப்படுகிறது.

வைட்டமின் சி

சி காய்கறிகள் போன்ற இறைச்சி இல்லாத உணவுப் பொருட்களில் இருந்து இரும்புச்சத்தை கிரகித்துக்கொள்ள உதவுகிறது மேலும் ஒரு ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாகவும் செயல்படுகிறது. உடல் திசுக்களின் வழக்கமான கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டிற்கும் முக்கியமானது.

துத்தநாகம்

உணவில் இருந்து சக்தியை வெளிப்படுத்த உதவுகிறது, மேலும் செல் பிரிதல், வளர்ச்சி மற்றும் திசு பழுதுநீக்கம் ஆகியவற்றுக்குத் தேவைப்படுகிறது. சாதாரணமான இனப்பெருக்க வளர்ச்சி, நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் காயங்கள் குணமாவதற்கும் அவசியமானது.

அயோடின்

தைராய்டு ஹார்மோன்களுக்கு தேவைப்படுகிறது. இது பல்வேறு வளர்சிதை செயல்முறைகளைக் கட்டுப்படுத்துகிறது மேலும் நமது உடல்களை அரோக்கியமாக வைத்திருக்கிறது.

ஹார்லிக்ஸ் எப்படி உங்களது குழந்தையின் ஊட்டச்சத்திற்கு இணையாக இருக்க முடியும் என்பதைப் பாருங்கள்

இதில் அறிவியல் உள்ளது

பொருட்கள்

ஆன்லைனில் வாங்கவும்

1 Krishnaswamy GJ et. al, Adequacy of Nutrient Intakes In Urban School Children. Poster (CMN-P-053) presented at: Nutrition Risk Management and Nutrition. 48th Annual National Conference of Nutrition Society of India; 4th – 5th November 2016, Bengaluru, India.
2
Ozdemir, N. (2015). Iron deficiency anemia from diagnosis to treatment in children. Türk Pediatri Arşivi, 50(1), pp.11-19.
3
Who.int. (2017). WHO | Micronutrients. [online] Available at: http://www.who.int/nutrition/topics/micronutrients/en/ [Accessed 28 Mar. 2017].
4
Branca F. Ferrari, M. Impact of micronutrient deficiencies on growth: the stunting syndrome. Ann Nutr Metab. 2002;46 Suppl 1:8-17.
5
International Food Policy Research Institute. (2014). Global Hunger Index: The challenge of hidden hunger. Chapter 03. Addressing the Challenge of Hidden Hunger. p 22.
6
Rao, Shobha, et al. "Intake of micronutrient-rich foods in rural Indian mothers is associated with the size of their babies at birth: Pune Maternal Nutrition Study." The Journal of nutrition 131.4 (2001): 1217-1224.
7
Claim based on a study conducted in 1999-2000 and published in Journal of Nutrition: 22(2006)S1-S39, comparing micronutrient enriched beverage vs. non fortified placebo. Shatrugna, V., Balakrishna, N. and Krishnaswamy, K. (2006). Effect of micronutrient supplement on health and nutritional status of schoolchildren: bone health and body composition. Nutrition, 22(1), pp.S33-S39
8
Nutrition.org.uk. (2017). Vitamins - British Nutrition Foundation. [online] Available at: https://www.nutrition.org.uk/nutritionscience/nutrients-food-and-ingredients/vitamins.html [Accessed 29 Mar. 2017].
9
Nutrition.org.uk. (2017). Minerals and trace elements - British Nutrition Foundation - Page #1. [online] Available at: https://www.nutrition.org.uk/nutritionscience/nutrients-food-and-ingredients/minerals-and-trace-elements.html?limit=1&start=3 [Accessed 29 Mar. 2017].

.